தனியார் மருத்துவமனைக்கு போங்க: நோயாளிகளை விரட்டும் டாக்டர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைக்கு போங்க: நோயாளிகளை விரட்டும் டாக்டர்கள்

Updated : ஜூன் 02, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (16)
Share
தனியார் மருத்துவமனைக்கு போங்க: நோயாளிகளை விரட்டும் டாக்டர்கள்

சென்னை : அரசு மருத்துவமனைகளில், இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும்படி, டாக்டர்கள் கூறுவதால், நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர்.

சென்னை, ராஜிவ்காந்தி, ஸ்டான்லி, ஓமந்துாரார், கீழ்ப்பாக்கம் ஆகிய நான்கு அரசு மருத்துவமைனைகளில், 1,750 படுக்கை வசதி உள்ளது. இதில், 1,350ல், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


குற்றச்சாட்டுமேலும், மருத்துவமனைகளின் கண்காணிப்பில் உள்ள, 10 கொரோனா சிறப்பு மையங்களில், 4,160 படுக்கை வசதி உள்ளது. அவற்றில், 1,520 நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு, உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சென்னையில் உள்ள, அரசு மருத்துவமனைகளுக்கு, தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்த நபர்கள் சிகிச்சைக்கு சென்றால், 'இங்கு இடமில்லை; தனியார் மருத்துவமனைகளுக்கு போங்க...' என, அரசு டாக்டர்கள் விரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறியதாவது:தனியார் ஆய்வகத்தில், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. உடனடியாக, அருகில் உள்ள, ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு, நேற்று முன்தினம் மாலை, 7:00 மணிக்கு சென்றேன். அங்கு, படுக்கை வசதி இல்லை. ராஜிவ்காந்திக்கு மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினர். அங்கு சென்ற போது, 'அனைவரையும் இங்கேயே அனுப்பினால், இங்க மட்டும் இடமிருக்குமா... ஏற்கனவே, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இடமில்லாமல், அதிகம் பேர் இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


1,000 படுக்கைகள்வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்' என, டாக்டர்கள் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்கான வசதி இல்லாததால், மீண்டும் ஓமந்துாரார் மருத்துவனைக்கு சென்று, நடந்ததை கூறினேன். அப்போதும், எனக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கவில்லை. எனக்கு சர்க்கரை நோய் உள்ளது; உடல்நிலையில் அதிக சோர்வு ஏற்பட்டு, மருத்துவமனை வாசலிலேயே படுத்து கிடந்தேன். அதன்பின், மதியம், 2:30 மணிக்கு கொரோனா வார்டில் அனுமதித்தனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

இதுகுறித்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தவிர்த்து, மற்ற மருத்துவமனை டீன்கள் கூறியதாவது:எங்கள் மருத்துவமனைகளில் உள்ள, அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. கூடுதலாக படுக்கைகள் ஏற்படுத்துவதற்கான வசதிகள் இல்லை.

ஆனால், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 1,000 படுக்கைகள் ஏற்படுத்துவதற்கான வசதிகள் உள்ளன.அங்கு கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தினால், முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகளிகளான கொரோனா பாதித்தவர்களுக்கு, சிகிச்சை அளிக்க முடியும். மற்றவர்களை, கொரோனா சிறப்பு மையங்களில் சிகிச்சை அளிக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதற்கு தீர்வு காண வேண்டும் எனில், முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, பிரத்யேகமாக, தனியார் கொரோனா சிறப்பு மையம் அமைக்க வேண்டும் என, ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X