அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிற்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு:தி.மு.க., கூட்டணி தீர்மானம்

Updated : ஜூன் 02, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (76)
Share
Advertisement
பிற்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு:தி.மு.க., கூட்டணி தீர்மானம்

சென்னை :மருத்துவப்படிப்பில், பிற்பட்டோருக்கு, 50 சதவீதம் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி, தி.மு.க., கூட்டணி கட்சிகள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று நடந்தது.இதில், காங்கிரஸ் - ம.தி.மு.க., - இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

தீர்மானங்கள் விபரம்:
*இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு, 50 சதவீதம் இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால், நாடு முழுதும் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து, போராட்டம் நடத்தப்படும்
*ஊரடங்கால், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மத்திய அரசு, 7,500 ரூபாய்; மாநில அரசு, 5,000 ரூபாயும் வழங்க வேண்டும்.
*புதிய மின்சார திருத்த சட்டத்தை, உடனே மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
*கொரோனா பேரிடரில் இருந்து, மக்களை காப்பாற்றுவதற்காக, தன்னலமற்று பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள், சுகாதார துறை பணியாளர்கள், போலீசார், அரசு ஊழியர்களுக்கு நன்றி.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.




1 லட்சம் குடும்பங்களுக்கு ஸ்டாலின் உதவி



சென்னையில், ஒரு லட்சம் குடும்பங்களுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நிவாரண உதவிகளை, நேற்று வழங்கினார்.முன்னாள் முதல்வர், கருணாநிதியின், 97வது பிறந்த தின விழா, சென்னை தெற்கு மாவட்ட, தி.மு.க., செயலர், மா.சுப்பிரமணியம் ஏற்பாட்டில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியாக, நேற்று நடந்தது.

சென்னை, கே.கே.நகரில் தலைமை செயற்குழு உறுப்பினர், தனசேகரன் ஏற்பாட்டில், 30 ஆயிரம் குடும்பங்களுக்கு, 5 கிலோ அரிசி, 10 கிலோ காய்கறிகள், மளிகை பொருட்கள், சானிடைசர் போன்றவற்றை, ஸ்டாலின் வழங்கினார்.சோழிங்கநல்லுார், பாலவாக்கம், வேளச்சேரி, சைதாப்பேட்டை, ஆலந்துார் என, பல்வேறு இடங்களில், ஒரு லட்சம் குடும்பங்களுக்கு, கொரோனா நிவராண உதவிகளை, ஸ்டாலின் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
03-ஜூன்-202018:44:56 IST Report Abuse
Tamilnesan தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கிய பஞ்சமி நிலத்தில் முரோசொலி கட்டிடம் கட்டியவர் தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி பேச வந்து விட்டார். சாத்தான் வேதம் ஓதுகிறது.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
03-ஜூன்-202018:42:34 IST Report Abuse
Tamilnesan முதலில் நீங்கள் கொள்ளை அடித்த இரண்டு லட்சம் கோடி ரூபாயில், ஒரு சதவிகித பணத்தை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு கொடுக்க பாருங்கள். அவர்கள் நிலத்தை ஆக்கிரமித்து முரோசொலி கட்டிடம் கட்டிய நீங்கள்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
03-ஜூன்-202018:35:03 IST Report Abuse
Tamilnesan முதலில் உங்கள் குடும்ப கட்சியில் ஒரு தாழ்த்தப்பட்ட நபருக்கு கட்சி பதவி கொடுக்க பாருங்கள். அதற்கு துப்பில்லாத சுடலை, அடுத்த இலைக்கு பாயசம் சொல்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X