பொது செய்தி

தமிழ்நாடு

மகள் படிப்பு பணம் ரூ.5 லட்சத்தில் நிவாரணம்:மதுரை மோகனை பாராட்டிய பிரதமர்

Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
மகள் படிப்பு பணம் ரூ.5 லட்சத்தில் நிவாரணம்:மதுரை மோகனை பாராட்டிய பிரதமர்

மதுரை,: கொரோனா ஊரடங்கால் தவிக்கும் எளியவர்களுக்கு உதவிட மகள் நேத்ரா படிப்பிற்காக சேமித்த ரூ. 5 லட்சத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய மதுரை தாசில்தார்நகர் சலுான் கடைகாரர் மோகனை 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.

மோகன் கூறியதாவது: சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் மேலசிறு போதில் விவசாயியாக இருந்த நான், 2001ல் இங்கு வந்தேன். தாயார் கனகம்மாள் சலுான் வைத்து
கொடுத்து பிழைக்க வழிகாட்டினார். மதுரையில் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட முதல் பகுதி தாசில்தார் நகர். சலுான் இருந்த மேல மடையும் பாதிக்கப்பட்டது.
இங்கு வசிக்கும் ஏழைகள் உதவி கேட்டனர். நானும் மனைவி பாண்டிச் செல்வியும் தயங்கினோம். 8வது படிக்கும் மகள் நேத்ரா, ''மக்களுக்கு உதவ வேண்டும்; இல்லை என்றால் சாப்பிட மாட்டேன். ஐ.ஏ.எஸ்., படித்து சம்பாதிப்பேன். என் படிப்பிற்காக சேமித்துள்ள
ரூ.5 லட்சத்திற்கு நிவாரணம் வழங்குங்கள்,'' என்றாள்.மகள் விருப்பப்படி செல்லுார், மேலமடை, தாசில்தார் நகர், ஒத்தக்கடை, மதிச்சியம், கருப்பாயூரணி பகுதிகளில் 1500 குடும்பங்களுக்கு குடும்பமாக சென்று அரிசி, காய்கறி, பலசரக்கு வழங்கினோம்.

சென்னை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.35 ஆயிரம் வழங்கினோம். நேற்று சலுானில் இருந்த போது 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியதை அறிந்து நெகிச்சியுற்றேன்.பா.ஜ., மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன் மூலம் மாநில தலைவர் முருகனும் முன்னதாக போன் மூலம் வாழ்த்தினார். எங்கள் சேவையை அறிந்த சினிமா இயக்குனர் பார்த்திபன் தன் நண்பர்களை அனுப்பி கவுரவித்தார். நேத்ரா கல்வி செலவை ஏற்பதாகவும் கூறினார், என்றார். இந்நிலையில் மோகன் நேற்று பா.ஜ.வில் இணைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
02-ஜூன்-202021:25:04 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு வாழ்த்து அட்டை என்று பாஜக உறுப்பினர் அட்டையை கொடுத்து விட்டு சென்று விட்டார்களாமே அந்த மாமனிதரிடம்?
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
01-ஜூன்-202023:22:16 IST Report Abuse
Siva வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
01-ஜூன்-202021:56:05 IST Report Abuse
Mithun வாழ்த்துக்கள் மோகன்ஜி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X