தலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
Rahul Gandhi, congress, bjp, BJP president JP Nadda, politics


காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ராகுல் மீண்டும் வர வேண்டும் என, சோனியா உட்பட பலர் விரும்புகின்றனர். ராகுலோ, அதற்கு பதில் சொல்லாமல், காலம் தள்ளி வருகிறார். ஆனால், சீனியர் தலைவர்கள் சிலர், 'ராகுல் தலைவராகக் கூடாது;சோனியாவே அந்த பதவியில் நீடிக்க வேண்டும்' என்கின்றனர்.


latest tamil news
ராகுலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறவர், ஒரு சீனியர் தலைவர். முன்னாள் அமைச்சரான இவர், வழக்கறிஞர் தொழிலில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். ராகுலுக்கு எதிரான குழுவின் தலைவர் இவர் தான்.ஊடகங்களில், ராகுலுக்கு எதிராக செய்தி வர வேண்டும் என்பதற்காக, தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களை அழைத்து, 'ராகுல் எதுவும் தெரியாமல், சகட்டு மேனிக்கு அறிக்கைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்; அவர் ஒரு முட்டாள்; அவர் கட்சி தலைவரானால் உருப்பட்ட மாதிரி தான்' என, சொல்லி வருகிறார்.சோனியாவிற்கு நெருக்கமான நான்கு தலைவர்கள், இந்த முன்னாள் அமைச்சருடன் கை கோர்த்துள்ளனர்.

இந்தக் குழுவின் பணத் தேவைகளையும், அந்த முன்னாள் அமைச்சர் கவனித்துக் கொள்கிறார்.இதற்கிடையே, ராகுல் தனக்கு ஆலோசனை வழங்க, ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழுவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தனக்கு நெருக்கமான, அதே நேரம், கட்சியில் யார் என்றே தெரியாத சிலரை நியமித்துள்ளார் ராகுல். இவர்கள் எல்லாம், முக்கிய புள்ளி விபரங்களை அலசி ராகுலுக்கு ஆலோசனை தருவராம்.
இந்தக் குழுவில், அந்த முன்னாள் அமைச்சர் மற்றும் வயதான தலைவர்களை ராகுல் சேர்க்கவில்லை. இதனால் தான், அந்த கோஷ்டி, ராகுலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்கின்றனர், விஷயம்தெரிந்தவர்கள்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
03-ஜூன்-202018:46:44 IST Report Abuse
Tamilnesan அத்தைக்கு மீசை மொதல்ல முளைக்கட்டும். ராகுல் வயசுக்கு வரட்டும்..........பிறகு பார்க்கலாம் தலைவனா, தொண்டனா என்று.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
01-ஜூன்-202021:43:25 IST Report Abuse
Baskar ஹல்லோ சந்திரன் இந்த கிழவரை உங்களுக்கு நினைவில்லையா. ஐயோ பாவம் நீங்களோ நானோ பிறந்திருக்க வாய்ப்பில்லை. இவர் தான் இந்தியாவின் தந்தை நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர். என்ன ஒன்று இவர் இத்தாலியை சேர்ந்தவர்.
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
01-ஜூன்-202018:54:14 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஊழல் கட்சிக்கு ஊழல் செய்து தப்பித்து சட்டத்தை விஞ்ஞான ரீதியாக கொண்டு பல்லாயிரம் கோடி பணம் சேர்த்து சொகுசு காணும் நபர் தலைவராக வர துடிக்கிறாரோ கடவுள் தான் அவரை கண்காணிக்கனும் சன்மானம் அளித்திடனும். இதுவரை செய்யாத தையா இனி காங்கிரஸ் நாட்டை ஆண்டு செய்யப்போகுது, செய்தது (ஊழல்) போதும் போதும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X