பொது செய்தி

இந்தியா

தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
tamil nadu, tn news, tamil news, tamil nadu assembly elections, coronavirus, covid 19, தமிழக தேர்தலுக்கு ஆயத்தம்


அமெரிக்கா சென்று, ஊரடங்கால் இந்தியா திரும்ப முடியாமல், அங்கேயே சிக்கிக் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சமீபத்தில் நாடு திரும்பி விட்டார். இப்போது, அவர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இன்னும் சில நாட்களில், அலுவலகம் வர ஆரம்பித்து விடுவார்.நவம்பர் மாதம், பீஹார் சட்டசபை தேர்தல் நடைபெற வேண்டும். இதையடுத்து, அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன், தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகியவற்றுக்கான சட்டசபை தேர்தல்களை நடத்த வேண்டும்.


latest tamil news




கொரோனா பரவலால், இந்த தேர்தல்கள் தள்ளிப் போகலாம் என, செய்திகள் அடிபட்டன. ஆனால், அதை பொய் என நிரூபிக்கும் வகையில், தலைமை தேர்தல் ஆணையம், அடுத்த வாரம் இதற்கான வேலைகளை துவக்க உள்ளது. மூன்று தேர்தல் ஆணையர்களும், இந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளோடு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழகத்தில், அடுத்த மாதம் முதல் வாரத்தில், தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்த உள்ளனர்.

குறிப்பாக, ஓட்டுக்கு பணம் தருவதை எப்படி தடுப்பது; சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்துவது என, பல விஷயங்களை அலசி ஆராய உள்ளனர். இதையடுத்து, தமிழக அரசியல் கட்சிகளோடும், ஆணையம் ஆலோசனை நடத்தும்.வரும் டிசம்பர் மாதத்திற்குள், தமிழக தேர்தல் ஏற்பாடுகளை முடிக்க வேண்டும் என்பது, தேர்தல் ஆணையத்தின் திட்டம். இதையடுத்து, தமிழகத்தில், ஏப்ரல் மாதத்தில், ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என்கின்றனர், தேர்தல் ஆணைய அதிகாரிகள்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
durairaj - coimbatore,இந்தியா
01-ஜூன்-202012:12:25 IST Report Abuse
durairaj ஒட்டுக்குபணம்தருவதை தடுக்க வழி என்ன என்பதை திரு மோடி அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
01-ஜூன்-202010:13:05 IST Report Abuse
Thiagarajan Kodandaraman சுடலையின் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்து இப்போது உள்ள விவசாயி ஆட்சி தொடர வாக்களிப்பார்கள் .இந்த கொள்ளை கூட்டத்துக்கு மொத்தமாக ஆப்பு எளிப்பார்கள்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
01-ஜூன்-202005:21:56 IST Report Abuse
Mani . V "யார் வீட்டில் எழவு விழுந்தால் நமக்கு என்ன? நீ ரசத்தை ஊத்து".
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X