பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள பயங்கரவாதிகள்

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
POK, terror camp, Kashmir,Pakistan,காஷ்மீர்,பாகிஸ்தான்

புதுடில்லி: ''கோடைக் காலத்தை பயன்படுத்தி, நம் நாட்டிற்குள் ஊடுருவ, அண்டை நாடான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பயங்கரவாதிகள் முகாமிட்டுள்ளனர்,'' என, உயர்மட்ட ராணுவ தளபதி, லெப்டினென்ட் ஜெனரல், பாகவல்லி சோமாஷேகர் ராஜு கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது: பயங்கரவாதத்தின் முதுகெலும்பை, நாம் ஏற்கனவே உடைத்துஉள்ளதால், ஜம்மு -- காஷ்மீரில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். ஆனால், இதை பாகிஸ்தானால் ஜீரணிக்க முடியவில்லை.


ஊடுருவ திட்டம்:


பயங்கரவாதத்தின் பின்புலம், ஏறக்குறைய உடைந்துவிட்டது. பயங்கரவாதிகளை அகற்றுவதில் நாம் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளோம். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எண்ணிக்கையை ஈடுசெய்ய, கோடைக்காலத்தில் எல்லை தாண்டிய ஊடுருவலை பாக்., அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம். இதற்கு அடிப்படையாக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முகாம்களில், பயங்கர வாதிகள் குவிந்துள்ளனர்.


latest tamil news



அங்குள்ள, 15 ஏவுதளங்களும் நிரம்பியுள்ளன. இவர்கள், பாக்., ராணுவத்தின் உதவியுடன், நம் நாட்டிற்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர்.இதுபோல், கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பயங்கரவாதிகள் ஊடுருவலுக்கு, பாக்., உதவி வருகிறது.


எதிர்ப்பு:


அவர்களுக்கு ஆதரவாக, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம் செயல்படுகிறது. போர் நிறுத்த மீறல்களுக்கு நாம் கொடுத்த பதிலடியில், அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளில், உலகம் ஒன்றிணைந்து செயல்படும் நிலையில், இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில், பாக்., தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், எல்லையில் நம் வீரர்கள், பாக்.,கின் அனைத்து நடவடிக்கைகளையும் முறியடிக்க, தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
01-ஜூன்-202020:56:10 IST Report Abuse
வாய்மையே வெல்லும் பாகிஸ்தானில் இருந்து வரும் ..இந்த பச்சை வெட்டுக்கிளிகளை..நசுக்கவேண்டும்..இனிமே பாரதம் என்றால் ஒரு பயம் இருக்க நமது செயல் காரணமாய் இருக்கும்.. தீவிர வியாதிகள் ஒழிக..
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
01-ஜூன்-202009:40:05 IST Report Abuse
Rameeparithi மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் பண்ணி காலி பண்ணுங்கோ ... ஜைஹிந்த்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-ஜூன்-202008:59:59 IST Report Abuse
Lion Drsekar நீங்கள் இருக்கும்வரை ....., பிறகு வருபவர்கள் மீண்டும் அவர்களுடன் அதே உறவை தொடர்வார்கள் , வந்தே மாதரம்
Rate this:
Ganesh Kumar - AUCKLAND,நியூ சிலாந்து
02-ஜூன்-202002:52:16 IST Report Abuse
Ganesh KumarLet us ensure that 'others' don't come...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X