ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை

Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Nawaz,Nawaz Sharif,Pakistan, former prime minister Nawaz Sharif, nawaz sharif news, நவாஸ்,நவாஸ் ஷெரீப், டீ

லண்டன்: சிகிச்சை பெறுவதற்காக லண்டன் சென்ற முன்னாள் பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப், ஓட்டலில் டீ சாப்பிடும் புகைப்படம் வெளியாகியது. இதையடுத்து பாக்., எதிர்கட்சிகள் நவாசை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 70. ஊழல் வழக்கில் சிக்கிய இவர், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்ல, நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு சென்றார். லண்டனில் உள்ள மருத்துவமனையில், அவர் சிகிச்சை பெறுவதாக கூறப்பட்டது.


latest tamil news


இந்நிலையில், லண்டனில் உள்ள ஒரு ஓட்டலில், தன் குடும்பத்தினருடன் அமர்ந்து, மகிழ்ச்சியுடன் நவாஸ் ஷெரீப், டீ சாப்பிடுவது போன்ற ஒரு புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, 'உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பொய் தகவல்களை கூறி விட்டு, லண்டனில் சுற்றித் திரியும் நவாஸ் ஷெரீபை கைது செய்து அழைத்து வர வேண்டும். அவரை பாக்., சிறையில் அடைக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நிலா - மதுரை,இந்தியா
01-ஜூன்-202018:07:35 IST Report Abuse
நிலா டீ ஆத்தின ஒருவர் இந்திய பிரதமர் டீ குடிக்கும் முன்னாள் பிரதமர் லண்டனில் உம்.....................
Rate this:
Cancel
krishna - chennai,இந்தியா
01-ஜூன்-202016:09:55 IST Report Abuse
krishna அட நீங்க வேற.இங் எங்க கிங்க்பின் பசி திஹார்ல களி தின்னப்பூட்டு ஹைதெராபாத் போய் சிகிச்சை எடுக்க போறேன் என சொல்லி ஜாமீன் வாங்கிட்டு என்ன கூவு கூவுறார். அவரு முன்னாடி இந்த நவாஸ் சரிப் எல்லாம் ஜுஜுபி. அகில உலக கொள்ளை கூட்டத்துக்கும் கிங்க்பின் காக இருக்க ஒரே தகுதி எங்க காரைக்குடி சிங்கத்துக்கு மட்டுமே உண்டு அய்யயோ சிங்கம் இல்ல அசிங்கம்.
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
01-ஜூன்-202015:22:21 IST Report Abuse
வாய்மையே வெல்லும் நவாஸ் ஷெரீப் போட்டுள்ளது "சிகப்பு ரோஜாக்கள் கமல்" தொப்பி.. இன்னும் எத்தனை பெண்களுக்கு லண்டன்ல தொப்பி போடபோறாரோ..யாம் அறியோம் பராபரமே.. சும்மா ஜாலியா இருக்காரு பாருங்க இந்த தள்ளாத வயசுல .. ஊரை திருடிவிட்டு நெஞ்சுவலி நாடகம்.. திருந்தாத உள்ளங்கங்கள் இந்த ஜகத்தில் இருந்தென்ன லாபம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X