பொது செய்தி

இந்தியா

எல்லையில் சீன வீரர்களுடன் மோதல்? 'வீடியோ' குறித்து இந்திய ராணுவம் விளக்கம்!

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
india, china, india china border, China border, 
இந்தியா, சீனா, ராணுவம்,விளக்கம்

புதுடில்லி : லடாக் எல்லையோரம், இந்திய சீன ராணுவத்திற்கு இடையில் மோதல்கள் ஏற்படுவது போல் வெளியான, 'வீடியோ'விற்கு, இந்திய ராணுவம் நேற்று விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா - சீனா இடையே, பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. சிக்கிம் மற்றும் லடாக் எல்லை அருகே, அவ்வப்போது இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே, மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மே, 5ம் தேதி, லடாக்கில் உள்ள, பாங்கோங் சோ எல்லையோரம், 250க்கும் மேற்பட்ட இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே, மோதல் வெடித்தது. இது, நிலைமையை மேலும் மோசமாக்கியது. இதையடுத்து, கிழக்கு லடாக்கில் உள்ள, பாங்கோங் சோ, கால்வன் பள்ளத்தாக்கு, டெம்சோக் மற்றும் தவுலத் பெக் ஓல்டி பகுதிகளில், மூன்று வாரத்திற்கும் மேலாக, பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாக பரவியது. அதில், பாங்கோங் சோ பகுதியில், இந்திய - சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.


latest tamil news


இந்நிலையில், இந்த வீடியோ குறித்து, இந்திய ராணுவம் விளக்கம் அளித்து, அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:சமூக வலைதளங்களில் பரவும் அந்த வீடியோ, உண்மையானது அல்ல. வடக்கு எல்லை பிரச்னையுடன், இந்த வீடியோவை இணைக்க முயற்சிப்பது தவறானது. இரு நாட்டுக்கும் இடையிலான வேறுபாடுகளை சரிசெய்ய, ராணுவ தளபதிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, லடாக் பகுதியில் எந்த மோதலும் நடக்கவில்லை. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்படும் இது போன்ற முயற்சிகளை வன்மையாக கண்டிக்கிறோம். எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும், இது போன்ற காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என, ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
01-ஜூன்-202019:55:42 IST Report Abuse
Vena Suna எவன் என்று கண்டுபிடித்து அப்படியே புலியின் வாய்க்கு கொடுங்க
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-ஜூன்-202018:37:43 IST Report Abuse
J.V. Iyer ஒரு சில ஊடகங்கள் வெளியிடும் சேதிகள் நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. என்றுதான் திருந்துவார்களோ
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
01-ஜூன்-202016:54:24 IST Report Abuse
இந்தியன் kumar இந்தியா சமாதமான நாடு ,ஆனாலும் நம் மண்ணை எந்த காரணம் கொண்டும் விட்டு கொடுக்க மாட்டோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X