பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.90 லட்சத்தை தாண்டியது

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
india, coronavirus_update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.90 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று (மே 30) ஒரே நாளில் 230பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5,394 ஆக அதிகரித்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (ஜூன் 1) காலை 09:30 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,90,535 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 5,394 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,818 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 93,322 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news


கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 230 பேர் உயிரிழந்துள்ளனர். 1,824 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
01-ஜூன்-202019:13:19 IST Report Abuse
K.Sugavanam கொரோன மஹாமாரியை அனைவரும் சேர்ந்து போராடி விரட்ட வேண்டும்..
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
01-ஜூன்-202018:31:57 IST Report Abuse
Endrum Indian நாராயணா தூங்காதே விழித்தெழு இதற்கு ஒரு வழி காண்பி இப்படி ஒவ்வொரு நாளும் மேலே போயிட்டே இருந்திச்சின்னா தாங்கல்லைடா சாமி துயிலெழுவாய் ஓம் நமோ நாராயாணா
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜூன்-202010:23:27 IST Report Abuse
Janarthanan 93322 active case, 91819 cured and 5394 dead என்று வெளியிட்டால் சற்று தெளிவான picture கிடைக்கும், மேலும் இதில் மஹா, டெல்லி, தமிழ்நாடு மாநிலத்தில் 60% மேல் உள்ளது? இந்த நிலைமைக்கு அடித்தளம் இட்டது யாரு???அரசை மட்டும் குறை சொல்ல வந்து விடுவார்கள் அடிமைகள்
Rate this:
01-ஜூன்-202021:15:55 IST Report Abuse
அண்ணா வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் ஆமாம் ரொம்ப தெளிவு தான் இப்போ ஏழாவது இடம் முன்னேற்றம் இன்னும் தினமும் 1000 என்று சென்னை 4000 ஈன்று மகா வில் இப்படி போகிறது உன்னை போன்ற சொம்புகள் முதலில் வெளி ஊரில் உள்ள அல்லக்கைகள் தான் இப்படி புலம்பல் பாதிக்க பட்டுள்ள நாங்கள் தான் இதை சொல்லுனும் நீங்கள் இங்கே குப்பை கோட்ட முடியல என்று தானெ ஓடின அப்புறம் என்ன உங்களுக்கு எங்களை பற்றி பேசுவதை நிறுத்து உன் ஊரில் கவனம் செலுத்து...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X