பொது செய்தி

தமிழ்நாடு

68 நாளுக்குப் பின் தமிழகத்தில் பஸ்கள் ஓடின

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
தமிழகம், பஸ், சேவை, ரயில், துவங்கியது, Tamil Nadu, TN news, SETC, bus service, coronavirus, corona, covid-19, corona outbreak, corona update, corona news, corona cases, lockdown, travel ban, covid-19 pandemic, TN govt, Drivers, conductors, masks, gloves, containment zone, chennai, Chief Minister, Edappadi Palanisamy, lockdown relaxation, State Transport Corporation

சென்னை: தமிழகத்தில் 68 நாட்களுக்கு பின்னர் அரசு பஸ் சேவை துவங்கியது. 60 சதவீத பயணிகள் மட்டுமே, மாஸ்க் அணிந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். டிரைவர்கள், கண்டக்டர்கள், மாஸ்க், கையுறை அணிந்து பஸ்களை இயக்கினர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்ததால், கடந்த 68 நாட்களாக தமிழகத்தில் அரசு பஸ்கள் இயங்கவில்லை. ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், சில தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி 60 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பஸ்களை இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 6 மண்டலங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
டிரைவர்கள், கண்டக்டர்கள் கைகளில் கையுறைகள் மற்றும் மாஸ்க் அணிந்து பஸ்களை இயக்குகின்றனர். பயணிகள் நின்று பயணிக்க அனுமதிக்கவில்லை. 3 பேர் அமரும் இருக்கைகளில் 2 பேரும், 2 பேர் அமரும் இருக்கைகளில் ஒருவரும் அமர அனுமதிக்கப்பட்டனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பஸ்கள் போக்குவரத்து துவங்கியது. இதற்காக ஏற்பாடுகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், காலை 6 மணி முதல் 40 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், கடலூர், விருத்தாசலம், திருக்கோவிலூர், செஞ்சி போன்ற பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.

திருச்சியிலும் பஸ் போக்குவரத்து துவங்கியது. முக்கிய வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பஸ்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு வெப்பமானி மூலம் சுகாதார பணியாளர்கள் பரிசோதனை செய்தனர். மாஸ்க் அணிந்த பயணிகளை மட்டுமே பஸ்சில் ஏற அனுமதி வழங்கப்படுகிறது.
சேலம் மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 397 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 262 புறநகர் பஸ்களும், 135 பஸ்களும் இயக்கப்படுகின்றன. பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இயக்கப்படுகிறது.நாமக்கல் மாவட்டத்தில் நகர மற்றும் புறநகர் பகுதிகளில் 120 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி இடையேயும் போக்குவரத்து துவங்கியது. தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை, திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. தூத்துக்குடி நகர பகுதிகளில் 27, புறநகர் பகுதிகளில் 22 பஸ்களும் இயக்கப்படுகின்றன.


ரயில்கள் இயக்கம்

தமிழகத்தில் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்திருந்தது. கோவை - காட்பாடி, கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில் வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டன.


latest tamil newsமதுரை - விழுப்புரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் புறப்பட்டது. ரயிலில் பயணிகள் ஏறுவதற்கு முன்னர் மாஸ்க் அணிந்திருந்தது உறுதிபடுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ரயில் பயணச்சீட்டு இருப்பவர்கள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். ரயிலில் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். திண்டுக்கல், திருச்சி, அரியலூர் ரயில் நிலையங்களில் நின்று சென்றது. 450 பேர் பயணித்த இந்த ரயில் 12 மணியளவில் விழுப்புரம் சென்றது. அங்கு பயணிகளிடம் இ பாஸ் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


கன்னியாகுமரியில் நாளை முதல் பஸ்இந்நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்: அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. கட்டணம் வசூலிக்க பே டி எம் வசதி செய்யப்பட்டுள்ளது. மண்டலம் விட்டு மண்டலம் செல்லும்போது இ பாஸ் கட்டாயம் வேண்டும். கன்னியாகுமரியில் நாளை முதல் அரசு பஸ்கள் இயங்கும். மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
01-ஜூன்-202019:38:53 IST Report Abuse
Bala Murugan தலைப்பில் " 68 நாட்களுக்குப் " "பேருந்துகள்" என்று வர வேண்டும். ஓட்டுனர்கள், நடத்துனர்கள், முகக்கவசம் என்று இடம்பெற வேண்டும். " பேருந்து நிலையத்தில் " என்று இடம்பெற வேண்டும்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
01-ஜூன்-202016:53:59 IST Report Abuse
Visu Iyer கொரானா வேகமாக பரவும் போது.. பஸ் ஓட்டுகிரார்களே.. லாக்டவுன் ரெலீஸ் என்று சொல்றாங்களே.. அது சரி.. இப்படி தான் செய்யனுமா.. இப்படி செய்தால் தான் கொரானா போகும் போல.. நம்பித்தானே ஆகணும்
Rate this:
Cancel
Sasi Kumar -  ( Posted via: Dinamalar Android App )
01-ஜூன்-202015:38:01 IST Report Abuse
Sasi Kumar காலையில் பஸ் வருகிறது என்று சப்தம் கேட்டவுடன் தெருவே பார்க்க ஆவலாக கூடிவிட்டனர். இதுவரை பஸ்ஸையே பார்க்காத மாதிரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X