சென்னையில் நல்ல மாற்றம் வரும்: மாநகராட்சி கமிஷனர்| Chennai will see good changes in 2 weeks: Municipal commissioner | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் நல்ல மாற்றம் வரும்: மாநகராட்சி கமிஷனர்

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (10)
Share
chennai, Corporation,சென்னை,மாநகராட்சி, கொரோனா, கமிஷனர், பிரகாஷ், Tamil Nadu, TN district, TN news, chennai Municipal commissioner, corona spread, coronavirus, corona, covid-19, corona outbreak, corona update, corona news, Prakash, corona patients, covid-19 pandemic, covid-19 curve, new corona cases

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னையில், அடுத்த இரண்டு வாரங்களில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியுள்ளார்.

சென்னை தண்டையார்ப்பேட்டையில், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது: சென்னையில், அதிக சோதனை செய்யப்படுவதால், அதிக பாதிப்பு உள்ளது. பாதிப்பு அதிகரித்து பின்னர் குறைந்துவிடும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பை கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தப்படும். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news


வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதித்தவர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். குடிசைப்பகுதிகளில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றை படிப்படியாக குறைக்க முடியும். மக்கள் அடர்த்தி என்பதால், தண்டையார்ப்பேட்டை ராயபுரத்தில் பாதிப்பு அதிகம் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னையில் இன்னும் இரண்டு வாரத்தில் நல்ல மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.

4 துறை தொடர்பான விவகாரம் என்பதால், கோயம்பேடு மார்க்கெட் திறப்பு குறித்து தற்போது கூற முடியாது. விதிகளை மீறினால் சலூன்கடைகள் அடுத்த 4 மாதம் திறக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X