பொது செய்தி

தமிழ்நாடு

மானியமில்லா சிலிண்டர் விலை உயர்வு

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Gas Cylinder, Price, Hike, Chennai, LPG cylinder, Liquified petroleum gas  cylinder, non-subsidised LPG cylinder price, India, coronavirus, TN, Tamil Nadu, metro cities, India, corona, covid-19, corona outbreak, corona news,  காஸ், கேஸ், சிலிண்டர், விலை, உயர்வு

சென்னை: தொடர்ந்து 3 மாதமாக குறைந்த மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை, தற்போது 37 ரூபாய் வரை அதிகரித்து, சென்னையில் ரூ.606.50 ஆக உள்ளது..

தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.


latest tamil news



விலை ஏற்றம்


இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த சிலிண்டர் விலை, கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3 மாதமாக குறைந்தது. தற்போது இன்று (ஜூன் 1ம் தேதி) அறிவிக்கப்பட்ட தமிழகத்தில் மானியமில்லா வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் மே மாதத்தில் ரூ.569.50 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.606.50 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஜூன்-202019:06:26 IST Report Abuse
ஆப்பு பெட்ரோல் விலையில் அடிக்கிறது போறலியாக்கும்... தமிழ்நாட்டுக்கு டாஸ்மாக் மாதிரி இவிய்ங்களுக்கு பெட்ரோலும், சமையல் வாயுவும்.
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
01-ஜூன்-202018:36:13 IST Report Abuse
karutthu அட ஆறுமுகம் .....இனி (விலைவாசி )எல்லாம் ஏறுமுகம் தான்
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
01-ஜூன்-202016:46:17 IST Report Abuse
ஆரூர் ரங் மானியம் வேண்டாம்னு எழுதிகொடுத்த தியாகிகள் ஒன்றும் வருத்தப்படப் போவதில்லை . ஏழைகளுமல்ல மாறாக கேஸ் மானியம் வேண்டும் என்றவர்களுக்கு இந்த உயர்வு பாதிக்காது .இதுபோன்ற நேரடி வங்கிக்கணக்கில் போடுவதால்தான் பொய்யான வீட்டு கேஸ் கனெக்ஷன்கள் துண்டிக்கப்பட்டு அதில் மிச்சப்படும் பணத்தில் பிரதமர் மோதியின் உஜ்வாலா திட்டத்தில் ஐந்து கோடி ஏழை வீடுகளுக்கு இலவச இணைப்புக்கள் கொடுத்தார்கள். காங்கிரஸ் அரசு வீட்டு சிலிண்டர்களுக்கே உச்சவரம்பு நிர்ணயித்தது மறக்காது . உருப்படியான உஜ்வாலா திட்டமும் போட்டு இப்போதுபோல ஏழை குடும்பங்களுக்கு உதவவுமில்லை .இப்போ 5 கோடிக்கணக்கான பெண்கள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் விறகுப்புகை நச்சிலிருந்து தப்பியுள்ளனர் புதிய இணைப்புகளால் ஒரு லட்சத்துக்கும் பேருக்கு மேல் புதிதாக கேஸ் ஏஜென்சிகளில் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளனர் . எனவே மோதி ஒழிக மோதி ஒழிக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X