'காட்மேன்' வெப்சீரிஸ் தயாரிப்பாளர், இயக்குனர் போலீசில் ஆஜராக உத்தரவு

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (42) | |
Advertisement
சென்னை : சர்ச்சைக்குரிய 'காட்மேன்' வெப்சீரிஸ் தொடர்பாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, நேரில் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் நடித்துள்ள வெப்சீரிஸ் காட்மேன். இதை விஜய் ஆண்டனி நடித்து வரும் தமிழரசன் படத்தின் இயக்குனர் யோகேஸ்வரன் இயக்கி இருந்தார். ஜீ5
Godman, Godmanwebseries, காட்மேன், காட்மேன்வெப்சீரிஸ்,

சென்னை : சர்ச்சைக்குரிய 'காட்மேன்' வெப்சீரிஸ் தொடர்பாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, நேரில் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் நடித்துள்ள வெப்சீரிஸ் காட்மேன். இதை விஜய் ஆண்டனி நடித்து வரும் தமிழரசன் படத்தின் இயக்குனர் யோகேஸ்வரன் இயக்கி இருந்தார். ஜீ5 ஓடிடியில் ஜுன் 12ல் வெளியிட இருந்தனர். இதன் டீசர் கடந்த வாரம் வெளியானது. அதில் இந்து கடவுள் நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலும் பிராமண சமூகத்தை இழிவுப்படுத்தி வசனங்களும், ஆபாச காட்சிகள் நிறைந்தும் இருந்தது சர்ச்சையானது.

இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இணையதளங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. சென்னை, மதுரை போன்ற நகரங்களில் போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த தொடரை தடை செய்ய வேண்டும். வெப்சீரிஸ்களுக்கு சென்சார் வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து அந்த டீசரை நீக்கினர். மேலும் இந்த தொடர் வெளியாகாது என ஜீ5 தரப்பில் கூறப்பட்டுள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா தெரிவித்துள்ளார்.


latest tamil news
இந்நிலையில் இந்த வெப்சீரிஸ் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட போலீசார் காட்மேன் தொடரின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashok Hanumanth - Bangalore,இந்தியா
01-ஜூன்-202021:52:00 IST Report Abuse
Ashok Hanumanth இந்த தொடர், Borjas (Netflix) தொடரை போல் எடுக்க வேண்டும் என்ற முயற்சி. Borjas தொடரை பார்த்தல் தெரியும், கிறிஸ்துவர்கள மற்றும் vaticannin லட்சணம். Borjas என்பவர் 1492 வருடம் Pope ஆகா இருந்தார். அவரும் அவர் குடும்பத்தாரும் அடிக்கும் கூத்தை பார்த்தால் கருணாநிதி, ஜெயலலிதா எல்லாம் ஒண்ணுமே இல்ல.. தயவு செய்து பாருங்கள்... அப்பொழுது தெரியும் Godman எதற்காக எடுத்தார்கள் என்று...
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
01-ஜூன்-202019:44:11 IST Report Abuse
Cheran Perumal கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மதங்களை இழிவு படுத்துவது நிறுத்தப்பட வேண்டும். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. இதில் தலையிட்டு கருத்து சொல்லவோ, கேலி செய்யவோ எவருக்கும் உரிமை இல்லை. திராவிடம் என்ற பெயரில் இந்து மத வெறுப்பு பிரச்சாரமே இவற்றுக்கெல்லாம் காரணம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-ஜூன்-202018:40:50 IST Report Abuse
J.V. Iyer இந்த மோசமான ஆட்களின் மீது எடுக்கும் நடவடிக்கைகளால், மற்றவர்கள் இப்படி ஒரு படத்தை எடுக்க பயப்படவேண்டும். முளையிலேயே கிள்ளி இருந்தால்தான் பிறகு பெரும் பிரச்சினையாக வெடிக்காது. சட்டம் தன்கடமையை செய்யட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X