பொது செய்தி

இந்தியா

ஐசிஎம்ஆர் விஞ்ஞானி, நிதி ஆயோக் அலுவலருக்கு கொரோனா: அலுவலகங்களுக்கு சீல்

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19,  நிடி ஆயோக், நிதி ஆயோக், ஐசிஎம்ஆர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், அலுவலகம், சீல், தூய்மைப்பணி, Indian Council of Medical Research, ICMR, ICMR scientist, COVID-19 positive, Delhi, ICMR building, Covid-19-related work, work from home, employees, NITI Aayog member, Dr Vinod Paul, epidemiology, coronavirus, covid-19, corona, corona outbreak, corona update, corona news

புதுடில்லி: நிதி ஆயோக் அலுவலக அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த அலுவலகத்தின் 3வது மாடி சீல் வைக்கப்பட்டு தூய்மைப்பணி நடந்தது. அதேபோல், ஐசிஎம்ஆர்., விஞ்ஞானி ஒருவருக்கும் கொரோனா உறுதியானதால், அந்த அலுவலகம் சீல் வைக்கப்பட்டு தூய்மைப்பணி நடந்து வருகிறது.

நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலையில், 1.90 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டில்லியில் உள்ள நிதி ஆயோக் அலுவலகத்தில் அலுவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், அந்த அலுவலகத்தின் 3வது மாடி சீல் வைக்கப்பட்டு, தூய்மைப்பணி நடந்து வருகிறது. முன்னதாக இந்த வாரம், வெளியுறவு அமைச்சகத்தில் பணிபுரிந்த இருவருக்கு கொரோனா உறுதியானது. அதில், ஒருவர், வெளியுறவு அமைச்சகத்தில் மத்திய ஐரோப்பிய பிரிவில் ஆலோசகராகவும், மற்றொருவர் சட்ட அலுவலராகவும் பணிபுரிந்து வருகிறார்.


latest tamil newsவிஞ்ஞானிக்கு கொரோனா


கொரோனா தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கி வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர் மும்பையில் இருந்து டில்லி வந்துள்ளார். கொரோனா அறிகுறி தென்படவே, அவருக்கு பரிசோதனை நடந்தது. இதில் கொரோனா உறுதியானது. இதனால், அவர் சிகிச்சையில் உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைபடுத்தி கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐசிஎம்ஆர் அலுவலகத்தில் நடந்த சில கூட்டங்களில் அந்த விஞ்ஞானி கலந்து கொண்டுள்ளார். இதனால், அந்த அலுவலகம் சீல் வைக்கப்பட்டு தூய்மை பணி நடந்து வருகிறது. தூய்மைப்பணி முடிந்த பிறகு, அங்கு அலுவலகம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஜூன்-202016:51:46 IST Report Abuse
ஆப்பு எல்லோரும் கட்டாயம் அலுவலகம் வரணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X