பொது செய்தி

இந்தியா

கொரோனா மருத்துவ கழிவுகளால் வேகமாக நிரம்பும் மஞ்சள் தொட்டி

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Covid-19, Trash, Yellow Bins, Medi Waste, Toes, coronavirus, corona, corona outbreak, COVID-19 Pandemic, Medical Waste, corona update, corona news, கொரோனா, மருத்துவ கழிவுகள், மஞ்சள் தொட்டி

புதுடில்லி: கொரோனா காரணமாக மருத்துவ கழிவுகள் அதிகரித்துள்ளதால், அதனை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. இரண்டு மாத கொரோனா ஊரடங்கிற்கு பின் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன. பல்வேறு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களும், கிருமிநாசினி மற்றும் ஊழியர்களின் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை அப்புறப்படுத்த மருத்துவ கழிவு பொருட்களை கையாள்வோரின் சேவைகளை பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளன.

ஏற்கனவே மருத்துவ கழிவுகளை அகற்றும் நிறுவனங்கள், மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில், கொரோனா தொடர்பான மருத்துவமனை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதி உள்ளிட்டவற்றில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகளை கையாள்வதில் இரண்டு ஷிப்ட்களில் பணியாற்றி வருகின்றன. கூடுதலாக கட்டுப்பாட்டு இல்லாத பகுதியில் இயங்கும் அலுவலகங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், பல் மருத்துவமனை ஆகியவை மருத்துவ கழிவுகளை கையாள்வோருக்கு கூடுதல் வேலைச்சுமையை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil newsஊழியர்கள் பற்றாக்குறை

'எங்கள் வேலைப்பளு கடந்த 1 மாதமாக அதிகரித்துள்ளது. நாங்கள் ஏராளமான நடைமுறை சிக்கல்களை சந்தித்து வருகிறோம். பொது போக்குவரத்து வசதி இல்லாததாலும், குடும்ப உறுப்பினர்கள் அனுமதிக்காததாலும் பல ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. இன்னும் சில பகுதிகளில், அண்டை வீட்டார் மற்றும் நில உரிமையாளர்கள் இந்த வேலை செய்வதை நிறுத்துமாறு கேட்டுகொண்டுள்ளனர். எங்களது வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை சரி செய்வதற்கு மெக்கானிக்குகள் கூட கிடைப்பதில்லை' என மும்பை, ராய்ப்பூர், லக்னோ நகரங்களில் 1.25 லட்சம் படுக்கைகளின் மருத்துவ கழிவுகளை அகற்றி வரும் எஸ்.எம்.எஸ் என்வோகேர் நிறுவனத்தை சேர்ந்த அமித் நிலாவர் தெரிவித்தார்.

மருத்துவமனை, நர்சிங் ஹோம்ஸ் மற்றும் உள்ளூர் கிளினிக்குகளில் இருந்து வரும் கழிவுகளை தூய்மை பணியாளர்களை கொண்டு அகற்ற கூடாது. இதற்கென பயிற்சி பெற்ற மருத்துவ கழிவுகளை கையாள்வோரை நியமிக்க வேண்டும். தற்போது அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களும், முகக்கவசம் ,கையுறை மற்றும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற ஊழியர்கள் பயன்படுத்தும் பொருட்களை கையாள நிறுவனங்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிருமிநாசினிகள், துடைப்பம் போன்ற போன்றவற்றையும் மருத்துவ கழிவுகளை கையாள்வோரிடம் ஒப்படைக்க வேண்டும்.


latest tamil newsமுக்கிய பங்காற்றும் மஞ்சள் தொட்டி


கொரோனா தொடர்புடைய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் மஞ்சள் தொட்டியில் போட வேண்டும். அவற்றை மருத்துவ கழிவுகளை கையாள்வோர் அலுவலகங்களில் சேகரித்து அப்புறப்படுத்துவர். கொரோனா மருத்துவ கழிவு மேலாண்மை விதிமுறைகளில் தொற்று கழிவுகள் என்பதை குறிக்க மஞ்சள் தொட்டி முக்கிய பங்காற்றுகின்றன. உடற்கூறியல், வேதியியல் மற்றும் திடக்கழிவுகள், அப்புறப்படுத்தப்பட்ட கைத்தறி, பயன்படுத்தப்பட்ட ஆய்வக பொருட்கள், மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் மஞ்சள் தொட்டியில் போடப்படுகின்றன.

நோய்த்தொற்று பரவுவதை தடுக்கவும், பாதுகாப்பாக அகற்றுவதற்கும், மருத்துவ உபகரணங்களின் மறுபயன்பாட்டை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது. கழிவுகளை பிரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் உள்ளது எனவும், நிறுவனங்கள் பொதுவான கழிவுகளுடன், மருத்துவ உபகரணங்கள், முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை கலக்க முயல்கின்றன. இது நடக்க கூடாத ஒன்று என நிலாவார் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் ஒரு நாளைக்கு கொரோனா மருத்துவ கழிவுகள் எவ்வளவு சேகரிக்கப்படுகிறது என்பது குறித்து மதிப்பிட முடியவில்லை. கொரோனா நோயாளிகள் தொடர்பான தகவல்களை போலவே கழிவுகள் தொடர்பாக தரவுகளையும் வெளிப்படையாக கூற கூடாதென மருத்துவமனைகளுக்கு அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. குறிப்பாக கொரோனா ஹாட்ஸ்பாட் மண்டலங்களில் மருத்துவ கழிவுகளை கையாள்வோர் அதிக அழுத்தத்தை சந்திப்பதற்கு இதுவே உதாரணமாகும். மருத்துவ கழிவுகள் கிருமிநாசினி அல்லது எரிப்பதன் மூலம் அழிக்கப்படுகிறது. கொரோனா கழிவுகளை எரிப்பதற்கு முன் கிருமிநீக்கம் செய்வது அவசியம் என அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
01-ஜூன்-202020:56:22 IST Report Abuse
venkatan அந்தந்த மருத்துவ மனைகளே கழிவு உருவாகும் இடத்திலேயே பிரிக்கப்பட்ட முறையில் கிருமிநாசினி திரவ தொட்டியில் போடப்பட்ட பிறகே தொட்டியுடன் கொண்டுசெல்லப்பட்டு தீயிட்டு விடலாம்.அல்லது மருத்துவமனையில் இன்சிநேரட்டர் செயல்படவேண்டும்.இதே நடைமுறையில் சடலங்களையும் எரித்து விட வேண்டும்.உலக அளவில் எரிக்கப்படாததால் ஒரு புது மாசு உருவாகிறது.மீண்டும் கிருமிகள் பரவ ஏதுவாக....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X