கொரோனா தாக்கம் குறைந்ததால் குதிரை சவாரி செய்யும் ராணி

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020
Share
Advertisement

லண்டன்: ராணி இரண்டாம் எலிசபெ,த் கொரோனா ஊரடங்கு காரணமாக தனிமையில் இருந்தார். கொரோனா தாக்கம் பிரிட்டனில் துவங்கிய பின்னர் தற்போது முதல்முறையாக தனது கருப்பு குதிரையில் சவாரி செய்கிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. விண்ட்சர் ஹோம் பார்க்கில் பச்சை நிற ஜாக்கெட்டும் ஸ்கார்பும் அணிந்து ராணி குதிரையில் ஒய்யார சவாரி மேற்கொண்டார்.



latest tamil news


14 வயதான பால்போரல் ஃபெர்ன் என்ற குதிரை இனத்தைச் சேர்ந்த இந்த போனி குதிரை ராணிக்கு மிகவும் பிடித்த ஒன்று. விண்ட்சர் கேசிலில் ராணி இதுபோல வழக்கமாக குதிரை சவாரி செய்வார். பல வருடங்களாக ராணி இரண்டாம் எலிசபெத் குதிரை சவாரி செய்யும் புகைப்படங்கள் பிரிட்டன் இதழ்களில் பிரசூரிக்கப்படும். கடந்த 68 ஆண்டுகளாக ராணியின் பிறந்தநாளன்று வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு ராயல் சல்யூட் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும். ஆனால் கொரோனா தாக்கத்தை முன்னிட்டு கடந்த ஏப்., மாதம் தனது 94வது பிறந்தநாளைக் ராணி கொண்டாடவில்லை.


latest tamil news


வீ டே என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் பேட்டியளித்த ராணி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அந்நாட்டில் கொரோனா சிகிச்சைக்கான பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஜூன் மாதம் ராணி பிறந்தநாளை முன்னிட்டு ராணுவ அணிவகுப்பும் நடைபெறும். அதுவும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்தமாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராணி, தற்போதைய கொரோனா காலத்தை இரண்டாம் உலகப் போர் காலத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். இந்த சூழலில் பிரிட்டன் மக்கள் அனைவரும் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X