பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா; இதுவரை 184 பேர் பலி

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Tamilnadu, CoronaCases, DeathToll, Discharge, CoronaVirus, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, பலி, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 1) புதிய உச்சமாக ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆகவும், பலி எண்ணிக்கை 184 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 50 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 23,495 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 72 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 11,377 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 9 பேரும், திண்டுக்கல், புதுக்கோட்டையில் தலா ஒருவர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



இன்று ஒரே நாளில் 413 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 13,170 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 10,138 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,322 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 19,961 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 2,212 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas - Chennai,இந்தியா
02-ஜூன்-202018:07:50 IST Report Abuse
Srinivas கொரோனா நோய்த்தொற்று பற்றி மக்கள் பயப்படத்தேவையில்லை என்று சொல்வது ஆட்சியில் உள்ளவர்கள். டாஸ்மாக்கிற்கு வந்த கூட்டம் பார்க்கும் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது. கோயம்பேடு சந்தை திறந்துவிட்டு அது ஒருபக்கம் தொற்றை கூட்டியது. இப்போது பேருந்தும் தொடங்கப்பட்டு இடைவெளி இல்லாமல் மக்கள் பயணம் செல்வதை பார்க்கமுடிகிறது. வரும் நாட்களில் நோய்த்தொற்று, இறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மக்கள் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும்?
Rate this:
Cancel
Sridhar - Chennai,இந்தியா
02-ஜூன்-202012:20:45 IST Report Abuse
Sridhar இன்று வரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பீதியை உண்டாக்குகிறது. சிகிச்சையில் உள்ளவர்கள், அன்று (24 மணி நேரத்தில் ) இறந்தவர்கள் காரணத்துடன், வீடு திரும்பியவர்கள், புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கைகள் மட்டும் விவாதிக்கலாமே?
Rate this:
Cancel
K RAGHAVAN - chennai,இந்தியா
02-ஜூன்-202009:13:56 IST Report Abuse
K RAGHAVAN உண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 263 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது 171 பேர் சிகிச்சை ... sir pl tell Mr Stalin what his party man Mr E VA Velu said
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X