தனிமைப்படுத்துதலுக்கான சிறப்பு ரயில்கள் ; டில்லியில் குவிப்பு

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி : கொரோனா பாதிப்புகளால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக சிறப்பு படுக்கை வசதிகளை கொண்ட ரயில்களை டில்லி அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ரயில்வே வாரியம் அனுப்பியது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹா.,முன்னிலையில் உள்ளது. தலைநகர் டில்லியிலும் (குறிப்பாக எல்லை மாவட்டங்களில்) கொரோனா தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது. இதனால் டில்லியிலும், ஹரியானாவின் எல்லை பகுதியில் உள்ள மாவட்டங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் நோய் பாதிப்புகளை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ரயில்பெட்டிகளில் சிறப்பு படுக்கை வசதிகளை அமைத்து கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டது. அதன் மூலம் பல நோயாளிகள் தனிமைப்படுத்தப் பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


latest tamil news



தற்போது பல இடங்களிலும் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் மேலும் நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை தனி்மைப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும், நோய் அறிகுறி இல்லாமலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் டில்லிக்கு சிறப்பு கொரோனா ரயில்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி ஏ.சி. அல்லாத 160 படுக்கைகள் கொண்ட 10 பெட்டிகளை தனிப்படுத்துவதற்காகவும், சுகாதாரப் பணியாளர்களுக்காக ஏ.சி. வசதி கொண்ட ஒரு பெட்டியையும் ரயில்வே வாரியம் டில்லியில் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
01-ஜூன்-202022:45:05 IST Report Abuse
Krishna No Social Distancing Seen-Poor Design-Disease Will Spread
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
01-ஜூன்-202019:56:15 IST Report Abuse
Visu Iyer இது தான் நல்ல வாய்ப்பு ரயில்வேயை தனியார் மயமாக்கிவிடலாம்.. சிக்கல் இல்லாமல் எல்லாம் sulabamaagividum
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூன்-202002:09:07 IST Report Abuse
தல புராணம்இப்படி "தர்ம" சேவையை நல்லா உரிஞ்சிக்கிட்டதுக்கு அப்புறம் ஏர் இந்தியாவையும், ரயில்வேயையும் தனியாருக்கு தரைமட்ட விலைக்கு வித்துடுவோம். பொதுத்துறை மேலே அம்புட்டு பாசம் நம்ம மோடிக்கு.....
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூன்-202002:16:58 IST Report Abuse
தல புராணம்டில்லி அரசு முன்னெச்சரிக்கையாக இதை செய்கிறது, பாராட்டப்பட வேண்டிய விஷயம். இங்கேயும் ரெண்டு மாசமா கல்யாண மண்டபம் எல்லாம் வாடகைக்கு எடுத்து கமிஷன் தான் பார்த்தாங்க. கட்டில் டொனேஷன் கொடுத்த கட்சியை கிண்டலடிச்சி கழுவி ஊத்துனானுங்க. இனிமே லபோ திபோன்னு அடிச்சிக்குவானுங்க. தனியார் ஆஸ்பத்திரி கொள்ளையடிக்கும். இன்சூரன்ஸ் பணம் தராது, ஆனால் கமிஷன் வாங்கிக்கொண்ட அரசாங்கம் பிரிமியம் கட்டிக்கொண்டிருக்கும். முதலாளி பெரிய பணமுதலை ஆயிருப்பான். பாஜக கட்சி தேர்தல் பத்திர வசூல் விண்ணை முட்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X