பொது செய்தி

தமிழ்நாடு

'காட்மேன்' வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (79)
Share
Advertisement
Godman, Godmanwebseries, Godmansuspended,

சென்னை : எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து 'காட்மேன்' வெப்சீரிஸ் வெளியீட்டை நிறுத்துவதாக ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெய்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் நடித்துள்ள வெப்சீரிஸ் 'காட்மேன்'. இதை தமிழரசன் படத்தின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கி இருந்தார். ஜீ5 ஓடிடியில் ஜுன் 12ல் வெளியிட இருந்தனர். அதற்கு முன்பாக இதன் டீசர் கடந்தவாரம் வெளியானது. அதில் இந்து கடவுள் நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலும், பிராமண சமூகத்தை இழிவுப்படுத்தி வசனங்களும், ஆபாச காட்சிகள் நிறைந்தும் இருந்தது சர்ச்சையானது.

இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இந்த தொடரை தடை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட இதன் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஜீ5 மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதற்கிடையே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட போலீசார், காட்மேன் தொடரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர்.


latest tamil news




இந்நிலையில் ஜீ5 நிறுவனம் டுவிட்டரில், ''எங்களின் காட்மேன் வெப்சீரிஸ் தொடர்பாக நிறைய கருத்துக்கள் வந்தன. அதன்காரணமாக இந்த தொடரின் வெளியீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். எந்த ஒரு மதம், சமூகம் மற்றும் தனிப்பட்டவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எங்களின் ஜீ5 நிறுவனத்திற்கோ, தயாரிப்பாளருக்கோ கிடையாது'' என பதிவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
03-ஜூன்-202010:44:40 IST Report Abuse
வாய்மையே வெல்லும் வெளிநாட்டில் இருந்து பணம் வந்து விளையாடி உள்ளார்கள்.. முதலில் அதை கவனிங்க .ஆபீஸர்ஸ் துர்வழியில் .வரும் பணத்தை முடக்கினாலே கயவர்களின் ஆட்டம் கிளோஸ் ..
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
03-ஜூன்-202010:14:29 IST Report Abuse
Lion Drsekar சில சமூக விரோதிகள் முழுநேர ஊழியர்களாக இதற்காகவே பணியாற்றுவதால் வரும் வினைதான் இது, . இவர்கள் கண்டிப்பாக சும்மா இருக்கமாட்டார்கள், மற்ற சமூக விரோதிகளுடன் கூட்டு சேர்ந்து மீண்டும் ஏதாவது பிரச்சனையை வேறு விதமாக கொண்டு வருவார்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
03-ஜூன்-202009:23:49 IST Report Abuse
தினகர் ... கும்பலின் மத வெறியாட்டம். அதை அப்படியே ஆமோதித்து இங்கே சில கருத்துக்கள். புல்கட்டில் மறைந்துள்ள சொந்தப்பெயர் சொல்ல வக்கில்லா ..கள். ஜாக்கிரதை ஹிந்துக்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X