பொது செய்தி

இந்தியா

பாரா மிலிட்டரி கேண்டீனில் வெளிநாட்டுப் பொருள் விற்பனைக்குத் தடை

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
paramilitary canteens, non swadeshi products, dropped, Home Ministry, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, covid-19 pandemic, 'Made in India' products, Home Minister Amit Shah, government-run canteens, coronavirus crisis, பார்லிமென்ட் கேண்டீன்

புதுடில்லி: பாரா மிலிட்டரி கேண்டீனில் ஆயிரம் வெளிநாட்டு இறக்குமதி திண்பண்டங்கள், வாடிக்கையாளர் பயன்பாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அது நிறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க, உள்நாட்டில் தயாரான பொருட்களை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது சமூக வலைதளங்களில் வரவேற்பு பெற்றுள்ளது. ஜூன் 1ம் தேதி(இன்று) முதல் இந்த செயல்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது.


latest tamil newsநுடெல்லா, கிண்டர் ஜாய், டிக் டாக், ஹார்லிக்ஸ் ஓட்ஸ், யுரேக்கா போர்ப்ஸ், டாமி ஹில்பிகர் உடைகல், அடிடாஸ் பாடி ஸ்பிரே ஆகிய பொருட்கள் இனி பாரா மிலிட்டரி கேண்டீன்களில் கிடைக்காது. சிலவித மைரோவேவ் ஓவன்கள் மற்றும் சில மின் உற்பத்திப் பொருட்கள் இனி கிடைக்காது. செகெட்சரஸ், ஃபெரேரோ, ரெட் புல், விக்டோரினாக்ஸ், சாஃபிலோ ஆகியவையும் இதில் அடக்கம்.

கென்ட்ரியா போலிஸ் கல்யான் பான்டார்ஸ் என்ற நிறுவனம் பாரா மிலிட்டரி கேண்டீன்களை நிர்வகித்து வருகிறது. வளாகத்தில் விற்கப்படும் பொருட்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், மூல பொருட்கள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள், முழுவதுமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்கள் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக பல மூல பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்பை நிறுத்தி விட்டன.

மோடி அரசின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் அடிப்படையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் சரிந்துள்ள இந்திய தொழில்துறையை மீட்க முடிவும் என நம்பப்படுகிறது. காண்டீன் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்குகின்றனர். அதிக விலை உள்ள பொருட்கள் ஆர்டரின் பெயரிலேயே வாங்கப்படுகின்றன. தற்போது வெளிநாட்டு பிராண்ட்கள் நிறுத்தப்பட்டுள்ளது விற்பனையில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆண்டுதோறும் பாரா மிலிட்டரி கேண்டீன்களில் 2800 கோடி வர்த்தகம் செய்யப்படுகிறது. சிஆர்பிஎப், பிஎஸ்எப், தொழில்துறை பாதுகாப்பு, இந்தோ திபெத்திய எல்லைப்படை, என்எஸ்ஜி, அஸ்ஸாம் ரைப்பிள்ஸ் ஆகியோர் இவர்களது வாடிக்கையாளர்கள் ஆவர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூன்-202002:01:45 IST Report Abuse
தல புராணம் சீன பொருட்களை பார்டரிலேயே வாங்கிக்க கடையை அங்கேயே தொறந்துடலாமே.. சண்டையும் வராது..
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
01-ஜூன்-202020:10:19 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga இது ஒரு நல்ல வரவேற்கத்தக்க விஷயம். இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உற்பத்தியாகும் பொருட்களை இந்திய நுகர்வோர்கள் குறிப்பாக ராணுவ வீரர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கட்டாயம் வாங்க வேண்டும். இந்திய உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தவேண்டும். இதேபோல அரசு ஊழியர்களின் குழந்தைகள் கட்டாயமாக அரசு பள்ளிகளில் தான் படிக்கவேண்டும் என்றும் சட்டம் கொண்டுவந்து கட்டாயமாக அமல் படுத்தப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X