சீன கம்யூனிஸ அரசு மேலும் மேலும் ஜனநாயகவாதிகளை ஒடுக்குகிறதா?

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

பீஜிங் : 1989-ம் ஆண்டு சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள டியானென்மென் ஸ்கொயர் பகுதியில் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.latest tamil newsசீனப்படை இவர்கள்மீது தாக்குதல் நடத்தியது. இது பெரும் வன்முறையாக மாற, இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜனநாயக ஆதரவுப் போராளிகள் கொல்லப்பட்டனர். அப்போது இது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகி உலகம் முழுக்க பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. டாங்க் மேன் என அழைக்கப்படும் ஜனநாயக புரட்சியாளர் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் போராட்டம் சீன ஜனநாயக ஆதரவாளர்களின் முக்கியமான போராட்ட நிகழ்வாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது. இதில் மரணம் அடைந்தவர்களது அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை சீன அரசு வெளியிடவில்லை. இவர்களது கல்லறைகளில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் மலர் துவி மரியாதை செலுத்துவது வழக்கம்.


latest tamil newsதற்போது கொரோனா தாக்கம் காரணமாக வழக்கமாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்த இரங்கல் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது ஹாங்காங் மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. ஏற்கனவே சீன கம்யூனிஸ அரசு ஹாங்காங்மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தி அதனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து ஹாங் காங் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த இரங்கல் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஹாங்காங் மக்களை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது.

டியானென்மென் படுகொலை உலக ராணுவப்படை கொலைவெறித் தாக்குதல்களில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. மக்களுக்கு எதிரான அரசின் ஒடுக்குமுறைகளின் உச்சமாகத் திகழும் இந்த படுகொலை ஆண்டுதோறும் நினைவுகூறப்படுவதை மறைக்க சீன அரசு திட்டமிட்டு செயல்படுவதாக ஜனநாயக ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
02-ஜூன்-202008:16:04 IST Report Abuse
VENKATASUBRAMANIAN DMK people ueed to agitate ively. If they don't get benefits, they will start thru their B team like udayakumar, thrumaran, etc. Sterlite is established long back and PC was one of the director , his wife is their legal advisor but congress will fight in TN against this factory. Like Stalin family are cbse scchool by imposing fine Rs500 when you talk in Tamil in the school premises but they fight against Hindi. This is an example. Some people commeting without showing their original name.
Rate this:
Cancel
02-ஜூன்-202005:59:55 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா ஜெய்ஹிந்புரம், தூத்துக்குடியில் தானே வைகுண்ட ராஜன் மினரல்ஸ் நிறுவனம் இருக்குது? அது ஏன் அது அந்த போராட்டகாரங்க கண்னுக்கு தெரியலையா? அந்த ஆலையின் கழிவு ஸ்டெர்லைட் கழிவை விட ஆபத்து நிறைந்தது என்று செய்தி கூட வந்ததே? பயம் தானே? முரசொலியை மட்டும் படிச்சா இப்பிடித்தான் தோணும்.
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
02-ஜூன்-202005:31:07 IST Report Abuse
B.s. Pillai After Hitler's massacre of jews, it is China and Sri Lanka which used the Military power to murder innocent public .But the world community looked upon such mass killings silently and without any reaction. The way it reacted against Hitler and his Army officers was in a different level, but hte recent military action by the Chinese and Sri Lanka was treated very mildly. So there is difference in treatment by allied countries and by asian countries. The same scale is not applied for these atrocities. The International court should voluntarily book China and Sri Lanka for this murders. Then only we are sure that democracy is working without bias.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X