பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை துவங்கியது!

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதென்மேற்கு பருவமழை,கேரளாவில் நேற்று துவங்கியது.இந்த பருவமழை,தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு படிப்படியாக பரவி, 102 சதவீதம் வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின், 17 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும், அரபிக்கடலில் புயல் உருவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து,
monsoon, kerala, weather report, kerala rains,கேரளா,தென் மேற்குப் பருவ மழை , துவங்கியது!

சென்னை:பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதென்மேற்கு பருவமழை,கேரளாவில் நேற்று துவங்கியது.இந்த பருவமழை,தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு படிப்படியாக பரவி, 102 சதவீதம் வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின், 17 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும், அரபிக்கடலில் புயல் உருவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:

தென்மேற்கு பருவமழை, கேரளாவில் நேற்று துவங்கியது. இந்த ஆண்டு நாடு முழுவதும், இயல்பான அளவில், 102 சதவீதம் வரை, பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடகிழக்கில், 107; மத்திய மாநிலங்களில், 103; தென் மாநிலங்களில், 102; வட மாநிலங்களில், 96 சதவீதத்துக்கு மேல் மழை பெய்யலாம். பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளின் வெப்பநிலையானது, பருவமழைக்கு சாதகமான நிலையில் உள்ளது.இவ்வாறு, அந்த மையம் கூறியுள்ளது.

தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை, அகில இந்திய அளவில், 89 செ.மீ., மற்றும் தமிழகம் மற்றும் புதுவையில் சராசரியாக, 35 செ.மீ., பெய்யும். தற்போது, வழக்கத்தை விட, 2 சதவீதம் வரை கூடுதலாக பெய்யலாம் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.


'நிஸர்கா' புயல்



இதற்கிடையில், அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'நிஸர்கா' புயலாக மாறி, இன்று முதல் மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்தை நோக்கி நகரும். வரும், 4ம் தேதிக்குள் இரண்டு மாநிலங்களுக்கு இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் அளித்த பேட்டி: தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, தமிழக மாவட்டங்களிலும் துவங்கியுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய, வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை புயலாக மாறி, வடக்கு திசையில் நகரும்.இதனால், லட்சத்தீவு, கேரளா கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா மற்றும் கோவா கடலோர பகுதிகளில், மணிக்கு, 70 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இந்த பகுதிகளுக்கு, 4ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.


17 மாவட்டங்களில்

.
தமிழகத்தில், வெப்பச் சலனத்தால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய, 17 மாவட்டங்களில், சில இடங்களில், இன்று லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும்.
சென்னையில், வானம் மேக மூட்டமாக காணப்படும். சில பகுதிகளில், லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும்.இவ்வாறு, புவியரசன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
02-ஜூன்-202006:04:21 IST Report Abuse
blocked user கரோனா முடிந்து வெள்ளமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X