'இ -பேப்பர்' சேனல்களை நீக்க டெலிகிராம் நிறுவனத்திற்கு 'கெடு'

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Delhi High Court, court news, telegram, jagran

புதுடில்லி: 'காப்புரிமை சட்டத்தை மீறி, 'இ - பேப்பர்' வெளியிடும் சேனல்களை, 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும்' என, 'டெலிகிராம்' சமூக வலைதள நிறுவனத்திற்கு, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சட்ட விரோதம்டில்லியைச் சேர்ந்த, ஜாக்ரண் பிரகாஷன் நிறுவனம், 'தைனிக் ஜாக்ரன்' பத்திரிகையை வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனம், டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ள தாவது:எங்கள் நிறுவனம், தைனிக் ஜாக்ரன் பத்திரிகையின், மின்னணு பதிப்பான, 'இ - பேப்பர்' படிக்கும் வசதியை, சந்தா செலுத்துவோருக்கு மட்டும் வழங்குகிறது. இந்நிலையில், துபாயைச் சேர்ந்த, டெலிகிராம் என்ற சமூக வலைதளத்தில், எங்கள் அனுமதியின்றி, சட்ட விரோதமாக, தைனிக் ஜாக்ரன் இ - பேப்பர், தினமும் வெளியிடப்படுகிறது. அதை வெளியிடும் சேனல் குறித்த விபரங்களை தர, டெலிகிராம் நிறுவனம் மறுக்கிறது.

எங்கள் மின்னணு பத்திரிகை இலவசமாக பகிரப்படுவதால், அதை வெளியிடும் சேனலில், மே, 20 நிலவரப்படி, 19ஆயிரத்து, 239 சந்தாதாரர்கள் இணைந்துஉள்ளனர். இதனால், எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே, காப்புரிமை சட்டத்தை மீறி, மின்னணு பத்திரிகையை வெளியிடும் சேனல் மற்றும் அதற்கு தளம் அமைத்துக் கொடுத்துள்ள, டெலிகிராம் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்னணு பத்திரிகை பகிர்வதை தடை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


டெலிகிராம் நிறுவனம்இந்த மனுவை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், காப்புரிமை சட்டத்தை மீறிய சேனல்களை, 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என, டெலிகிராம் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சேனல் உரிமையாளர்களின் விபரங்களையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில், டெலிகிராம் நிறுவனம், துபாயில் உள்ளதால், அதை கட்டுப்படுத்தும் அதிகாரம் தனக்கில்லை என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஊடகங்களும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்வதால், 'டெலிகிராம்' நிறுவனம் மீது, மேலும் பல வழக்குகள் தொடரப்படும் எனத் தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
02-ஜூன்-202022:05:21 IST Report Abuse
Tamilnesan ஊடகங்கள் உண்மை செய்திகளை வெளியிடாமல் பொய்யும் புரட்டும் செய்திகளை வெளியிடுகிறதே, இதற்கு என்று இந்தியாவில் ஏதாவது சட்டம் உள்ளதா? இதை கேட்க இங்கு யாருமில்லையா ? தர்மம், நியாயம் இந்தியாவில் மறித்து போகி விட்டதா? நீதி மாண்டு விட்டதா?
Rate this:
Cancel
02-ஜூன்-202019:51:43 IST Report Abuse
ஸ்ரீநிவாஸ்  வெங்கட் வெல்லம் தின்றது ஒருவன் விரல் சூப்பியவன் ஒருவன் என்பது போல், சினிமா, புத்தகங்கள் எப்போதுமே காப்புரிமை மீறல்களை சந்தித்தே வந்து இருக்கிறது. ஆங்கில புத்தகங்களின் போலிகளின் விலை உண்மை வெளியீட்டை விட மிக மிக குறைவு. போலிதான் வாசகர்கள் விரல்களில் தவழும். இப்போது இணைய வெளி அதிகரித்ததும் இ-பேப்பர் வலம் வருவது அதிகரித்து உள்ளது. டெலிகிராப் மட்டும் அல்லாமல் வாட்ஸ் அப் குரூப்களில் கூட சிலர் இது போல பரவ விடுகிறார்கள். எழுத்தாளர்களின் ஒரே வருமானம் நுால் விற்பனை என்ற நிலையில் பிடிஎப் முறையில் அதை உலாவிடுவது, அநியாயம். நீதிமன்றம் இந்த ஒரு வழக்கில் மட்டும் தீர்ப்பு அளிக்காமல், இது போன்ற நடைமுறை அனைத்தையும் தடை செய்ய உத்தரவிட வேண்டும்.
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
02-ஜூன்-202010:02:01 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஊழல் செய்பவனே நாட்டில் பெரியவனாக தென்பட வைக்கிறது ஊடகங்கள். நீதி மன்றமும் அவனுக்காக பாடுபடுகிறது. நேர்மைக்கு என்றும் மதிப்பில்லை தான். எனக்கு கல்வித்துறை லஞ்ச சுயநல அதிகாரிகள் செய்துள்ள செயல்களை உயர் நிலை அதிகாரிகளுக்கு பல்லாண்டாக தெரிவித்தும் குற்றம் செய்துள்ள கீழ் நிலை அதிகாரிகளுக்கே அனுப்பி விட்டு காலம் கழித்து வந்தனர் .இனியும் காலதாமதம் செய்ய க்கூடாது என திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் பார்ட் இன் பர்சனாக முறையிட்டு வழக்கு பதிவு செய்தும் குறைதீர்மன்றத்திற்கு பணியேற்ற பலதலைவர்கள் ஏனோதானோ என் தட்டி கழித்தே சென்றனர் ஐந்து ஆண்டுகளுக்கு ஓர் நியாயமாக நேர்மையாக செயல்பட வந்த திருமிகு கிள்ளி வளவன் பி.ஏ.பி.எல் என்ற வழக்கறிஞர் தலைவராக வந்தபோதுதான் என் வழக்கை முடித்து உத்தரவிட்டார் . எனக்கு வழங்கவேண்டிய ஓய்வூதிய பயன்களை ஐந்து ஆண்டு காலதாமதமாக வழங்கியதை கண்டித்து இழப்பீடு 9 % வட்டி சேர்த்து வழங்கும் காலம் வரை சேர்த்து வழங்க உத்தரவிட்டார். அதையும் மதிக்காத அலுவரை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஓய்வூதியர் குறைதீர்வு நாளில் முறைப்படி ஆஜராகி தெரிவித்தும் 2017 ல் வழங்கிய நீதிமன்ற உத்தரவிற்கு இன்றுவரை யாதொரு பயனும் கிடைக்கல.... அப்படிபட்ட ஆட்சியர் நிர்வாகத்தில் என்ன பயனை கான இயலும்... ஊழல்வாதிகளுக்கு துணை போகும் அலுவலர்கள் இருக்கும் வரை நியாயம் நீதி பார்க்க நினைப்பது கடினம் என தோன்றுகிறது. திரு மிகு கிள்ளி வளவன் பி.ஏ.பி.எல் போன்றோர் நிர்வாகத்தில் உள்ளதால்தான் கொஞ்சமாவது நீதிகிடைப்பதோடு மழையும் பெய்கிறது எனலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X