அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தொழில் துவங்க 9 நிறுவனங்களுக்கு இ.பி.எஸ்.,அழைப்பு

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
Tamil Nadu CM, tamil nadu, chief minister Edappadi K Palaniswamy, COVID-19, coronavirus, tamil nadu coronavirus

சென்னை: உலக அளவில், வானுார்தி துறையில், தலைசிறந்த ஒன்பது முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை, தமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுத்து, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல், உலக பொருளாதார சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை, இந்தியாவிற்கு மாற்ற முடிவெடுத்துள்ளன. அம்முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர், சிறப்பு பணிக் குழு அமைத்துள்ளார்.

கடந்த வாரம், தமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுத்து, 13 தொழில் நிறுவனங்களுக்கு, முதல்வர் கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக, 'யுனைடெட் டெக்னாலஜி, ஜெனரல் எலக்ட்ரிக்' உட்பட, ஒன்பது முன்னணி வானுார்தி நிறுவனங்களின் தலைவர்களை, தமிழகத்தில் முதலீடு செய்ய, நேரடியாக அழைப்பு விடுத்து, முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.

அதில், தமிழகத்தில், புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள, பல்வேறு சாதகமான அம்சங்கள், சிறப்பான தொழில் சூழல் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். புதிய தொழில் முதலீடுகளுக்கு, தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும், தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூன்-202020:02:51 IST Report Abuse
babu எந்தெந்த மந்திரிமாருக்கு பினாமிகளாகவோ?
Rate this:
Cancel
Sundar - Chennai,இந்தியா
02-ஜூன்-202015:38:13 IST Report Abuse
Sundar வந்திடுவாங்க காப்பாத்தப்போறோம் தமிழனைன்னு
Rate this:
Cancel
kuzhpavan - toronto,கனடா
02-ஜூன்-202013:47:29 IST Report Abuse
kuzhpavan ஸ்டர்லைட் நேர்ந்த கதி பார்த்தும் டாஸ்மாக் வளர்ச்சிய பார்த்தும் உலகமே தமிழ் நாட்டை சீண்டாது
Rate this:
ganesh - Jeddah,சவுதி அரேபியா
02-ஜூன்-202015:03:24 IST Report Abuse
ganeshTN...should be role model for others...but...in Corona...we are one of the WORST model and giving interview everyday by everyone...that we are doing GREAT Job ?..... Which one is bench mark for us ?. Take like CHINA....Wuhan city....compare with them to Chennai...TN is Out of control now....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X