பார்லி., மழைக்கால கூட்டத்தொடர்: வெங்கையா, ஓம் பிர்லா ஆலோசனை

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
monsoon session, parliament, Venkaiah Naidu, om birla,
பார்லி., மழைக்கால, கூட்டத்தொடர்,வெங்கையா, ஓம் பிர்லா, ஆலோசனை

புதுடில்லி : பார்லி.,யின் மழைக்கால கூட்டத்தொடர் குறித்து, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர், நேற்று ஆலோசனை நடத்தினர்.
ஆண்டுதோறும், பார்லி.,யின் மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை மற்றும் ஆக., மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நடுவே, மழைக்கால கூட்டத்தொடர்களை பாதுகாப்பாக நடத்துவது குறித்து, ராஜ்யசபா
தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர், நேற்று ஆலோசனை நடத்தினர்.ராஜ்யசபா தலைவரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இரு சபைகளின் பொதுச் செயலர்களும் பங்கேற்றனர்.


latest tamil news



கூட்டம் குறித்து, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில், வழக்கமான முறையில் கூட்டத்தொடர்களை நடத்த முடியாமல் போனால், தொழில்நுட்ப அடிப்படையில், புதிய வழிமுறைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.லோக்சபா கூட்டத்தை மைய மண்டபத்திலும், குறைவான உறுப்பினர்கள் கொண்ட ராஜ்யசபா கூட்டத்தை, லோக்சபா அரங்கிற்கும் மாற்றம் செய்வது உள்ளிட்ட, பல்வேறு விஷயங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டது. இரு சபைகளையும், மாற்று நாட்களில் நடத்துவது குறித்தும், ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்போர், சமூக விலகலை பின்பற்றுவது மற்றும் பார்லி.,யின் மைய மண்டபத்தை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யும்படி, பொதுச்செயலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, லோக் சபா மற்றும் ராஜ்யசபா தலைவர்கள் அறிவுறுத்தினர்.அத்துடன், பார்லி., கூட்டத்தை, 'ஆன்லைன்' வாயிலாக, நீண்ட நாட்கள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு நடுவே, மார்ச், 23ல் பார்லி., கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
02-ஜூன்-202008:18:57 IST Report Abuse
sankaranarayanan பார்லி., கூட்டத்தை, 'ஆன்லைன்' வாயிலாக, நீண்ட நாட்கள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்பது முற்றிலும் வரவேற்கத்தக்கது. இதனால் கீழ்க்கண்ட பலன்கள் :- 1. சபைகளில் சண்டை வராது. 2. சபையை தள்ளி போட வேண்டிய அவசியம் சபைத்தலைவருக்கு வராது 3. சபையில் யாரும் தூங்க மாட்டார்கள் 4. சபையில் துண்டு காகிதங்கள் கொடுக்கப்படாது 5. சபை கூடும் செலவு மிச்சம் 6. சபை உறுப்பினர்களுக்கு உண்டான ரயில், விமானம், தங்குமிடத்தில் இலவச சாப்பாடு, டிபன், இன்னும் எல்லா வகைகளும் செலவு மிச்சம் 7. ஒருவருக்கு ஒருவர் சபையில் அடிதடி கிடையாது 8.தர்ணா போராட்டம் சபையின் வெளியே/உள்ளெ போட முடியாது 9. இஷ்டப்படி சபைக்கு எந்த நேரமும் வந்தாலும் சபைத்தலைவருக்கு தெரியாது 10.எந்த உடை வேண்டுமானாலும் உடுத்திக்கொள்ளாலாம் ஆதாலால் சபைக்கூட்டத்தை ஆன் லயனில் செய்வதே உத்தமம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X