ஆர்மீனியா பிரதமருக்கு கொரோனா; மீண்டு வர மோடி வாழ்த்து

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Armenia PM, Armenia, prime minister, coronavirus, covid 19,

யேரவான்: ஆர்மீனியா நாட்டின் பிரதமர், அவரது குடும்பத்தாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய நாடான ஆர்மீனியாவின் பிரதமர், நிகோல் பஷினியன் மற்றும் அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. மொத்தம், 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாட்டில், இதுவரை, 9,000 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது.

மார்ச் மாதத்தில் இருந்து அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது. எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், ராணுவ முகாமுக்கு செல்வதற்கு முன்பாக சுயமாக பரிசோதனையை, நிகோல் மேற்கொண்டார். அப்போது, அவருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அதையடுத்து, வீட்டில் இருந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளார்.


latest tamil news




மோடி வாழ்த்து


இந்நிலையில் ஆர்மீனியா பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தார், கொரோனாவிலிருந்து விரைவாக மீண்டு வர வேண்டும் பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், கொரோனாவுக்கு எதிராக போராடும் ஆர்மீனியாவுக்கு, இந்தியா துணை நிற்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூன்-202009:40:04 IST Report Abuse
ஆப்பு ஆரோக்கிய சேது அன்பளிப்பா அனுப்பலாமே...
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூன்-202002:04:02 IST Report Abuse
தல புராணம் ஆர்மீனியா பிரதமருக்கு கொரோனா மீண்டு வர மோடி வாழ்த்து .. நல்ல வேளை "கொரோனா மீண்டும் வர மோடி வாழ்த்து" ன்னு சொல்லல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X