இன பேதத்துக்கு சுந்தர் பிச்சை எதிர்ப்பு

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
sundar pichai, Google and Alphabet CEO Sundar Pichai, George Floyd, Google, Racial Equality

வாஷிங்டன் : அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்தவர், போலீசால் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, 'கூகுள்' சமூக வலை தளத்தின் தலைமை செயலர் அதிகாரியான, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, சுந்தர் பிச்சை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு(49) என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்த போலீசார், தரையில் வீழ்த்தி, அவருடைய கழுத்தின் மீது, தன் கால் முட்டியால் அழுத்தியதால் அவர் கொல்லப்பட்டார். இதனை கண்டித்து அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.


latest tamil news


இந்நிலையில் இன பேதத்துக்கு சுந்தர் பிச்சை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'இன பேதம் கூடாது என்பதே எங்களுடைய கொள்கை. அமெரிக்காவில் எங்களுடைய இணைய தளத்தின் முகப்பு மற்றும், 'யுடியூப்' பக்கங்களில் கறுப்பின மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் இடம்பெறும்' என, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NEETHIVARMAN - vatican,வாடிகன் சிட்டி
02-ஜூன்-202020:11:17 IST Report Abuse
NEETHIVARMAN தமிழ் நாட்டில் ஒவ்வொரு தெரு, ஏரியா, மாவட்டம் மாநிலம் என்று எல்லா மட்டத்திலும் சாதி,மதத்தின் பெயரில் வன்முறை மற்றும் ரவுடித்தனம் செய்துகொண்டுள்ளார். அதற்கு நம் தேச சட்டத்தில் குறிப்பிட்ட சாதி மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு வழிமுறைகள் முக்கிய காரணமாக உள்ளன. பல சட்டவிரோத செயல்கள் செய்துவிட்டு இந்த சிறப்புசலுகைகள் மூலம் தங்களை தற்காத்து கொள்கின்றார்கள். வெளிப்படையாகவே அடங்கமறுப்போம் அத்துமீறுவோம் என்று சிலைகளுக்கு அடியில் கல்லில் பொறித்துள்ளனர். சட்டதிட்டங்களுக்கு அடங்க மறுப்பவர்கள் எப்படி இந்திய இறையாண்மையை நேசிப்பவர்களாக இந்தியாவின் மீது தேசப்பற்று கொண்டவர்களாக இருக்கமுடியும்.
Rate this:
Cancel
K.GOPINATHRAJA - cuddalore,இந்தியா
02-ஜூன்-202019:54:27 IST Report Abuse
K.GOPINATHRAJA சுந்தர் பிச்சை உங்களுக்கு இது தேவையில்லாத பிரச்சினை. வியாபாரத்திலோ அல்லது நிறுவன செயல்பாட்டிலோ உள்ளவர்களுக்கு அரசியல் தேவையில்லை. இந்த அறிக்கை உங்கள் வளர்ச்சியையும் நிறுவன வளர்ச்சியையும் பாதிக்கும் .கறுப்பர் வெள்ளையர் இருவருக்கும் ஆதரவோ அல்லது எதிர்ப்போ காட்ட கூடாது .
Rate this:
Cancel
Selvaraj Chinniah - sivagangai,இந்தியா
02-ஜூன்-202017:19:36 IST Report Abuse
Selvaraj Chinniah இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ரொம்பவும் சிரமத்துல இருக்கோம். கொஞ்சம் அதுக்கும் குரல் கொடுங்கள். தலித், சிறுபான்மையினர் என்று சொல்லி. எங்கள் உரிமைகளை எல்லாம் பிடுங்கி கொண்டு இருக்கின்றார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X