பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனைக்கு தனியாரில் ரூ.3,000 கட்டணம்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
கொரோனா பரிசோதனைக்கு தனியாரில் ரூ.3,000 கட்டணம்


சென்னை: ''தமிழகத்தில் உள்ள, தனியார் ஆய்வகங்களில், கொரோனா பரிசோதனைக்கு, 3,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், பேராசிரியர் ரவி, கொரோனாவால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து, நேற்று பணிக்கு திரும்பிய அவரை, அமைச்சர்
விஜயபாஸ்கர், செயலர் பீலா ராஜேஷ், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநக ராட்சி கமிஷனர் பிரகாஷ் உள்ளிட்டோர்,
பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.பின், அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைக்கு, தற்போது, 500 படுக்கை வசதி
உள்ளது. இங்குள்ள, பழைய கட்டடத்தில், 400 படுக்கை வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டு, ஓரிரு நாட்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.சென்னைக்கு, ஈரோடு மாவட்டத்தில் இருந்து, மருத்துவ குழுவினர் வருகின்றனர். மேலும், கூடுதல் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
காய்ச்சல், சளி போன்றவைகளுக்கு, மருந்தகங்கள் தன்னிச்சையாக மருந்து வழங்கினால், நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

எந்த பாதிப்பாக இருந்தாலும், டாக்டரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும். தனியார் மருத்துவமனையில், கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்கான கட்டணம், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், எவ்வளவு தொகை என்ற அடிப்படையில் வெளியிடப்படும்.
கொரோனா பரிசோதனையில், 80 சதவீதம், அரசு ஆய்வகங்களில் நடத்தப்படுகிறது. 20 சதவீதம் மட்டுமே, தனியார் ஆய்வகங்களில் செய்யப்படுகிறது. தனியார் ஆய்வகங்களில், கொரோனா பரிசோதனை செய்ய, 4,500 ரூபாய் கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 3,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்க, தனியார் ஆய்வகங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
02-ஜூன்-202009:49:37 IST Report Abuse
Girija தற்சமயம் தமிழ்நாட்டில் நடக்கும் சில விஷயங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. தனியார் மருத்துவமனைகள் எப்பொழுதோ அரசின் கட்டுப்பாட்டைவிட்டு போய்விட்டது . ஜெ விற்க்கே அந்த நிலைமை அப்போது சாமானியர்கள் எம்மாத்திரம் ?. தமிழ்கத்தில் குறிப்பாக சென்னை மக்கள் கலாச்சாரம் சுய ஒழுக்கம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கொரோனா மருத்துவ அறிக்கையை கூட எளிய முறையில் சொல்ல தெரியவில்லை. ஆனால் அதை படிக்கும் அதிகாரியின் உடை அலங்காரம் பற்றி கவனிக்கப்படுகிறது, இத்தனைக்கும் அந்த அதிகாரி கோட் போன்ற சட்டை அணிந்து புடவையில் தான் தோன்றுகிறார். கலாச்சாரம் இப்படி உள்ளது, ஊரடங்கு என்றால் இலவசம் . தகுதியில்லாத நடிகர்கள் தரமற்ற வகையில் அரசு கொரோன விளமபரத்தில் நடிக்கின்றனர். தம்பி ராமையா விளம்பரம் பெண்களை இழிவு படுத்தும் விதத்தில் மோசமாக உள்ளது. தனியார் மருத்துமனை கொரோனா கட்டணத்தை இலவசமாக்கமல் பெப்சிக்கு ஜெ மண்டபம் அமைக்க ஐந்து கோடி ஐம்பது ஏக்கர். இது அவசியமா? அதுவும் அதை முன்னினின்று செய்பவர் நம்பகத்தன்மை செயல்பாடுகள் வேறு ஏற்கனவே கேள்விக்குறி இதற்கு பதில் ஜெ பெயரில் மருத்துவமனை பில்ட் அண்ட் ஆப்ரெட் சாலை போக்குவரத்து மாதிரி தனியாரிடம் கொடுத்து அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் மருத்துவ சேவை செய்ய்ய அனுமதிக்கலாமே ? தூண்களும் அரங்குகளும நிர்மாணித்து சுற்று சூழலை எதற்கு மாசுபடுத்தவேண்டும் ?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
02-ஜூன்-202007:32:45 IST Report Abuse
Mani . V "தமிழகத்தில் உள்ள, தனியார் ஆய்வகங்களில், கொரோனா பரிசோதனைக்கு, 3,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படும். (இதில் தனியாருக்கு 1000 ரூபாய், 2000 ரூபாய் எங்களுக்கு).
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
02-ஜூன்-202006:24:26 IST Report Abuse
blocked user இக்கட்டான காலக்கட்டத்தில்க்கூட இப்படி தனியார் மருத்துவமனைகள் கொள்ளையில் ஈடுபட்டால் பொது மக்கள் என்னாவது?
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூன்-202007:53:57 IST Report Abuse
தல புராணம்உள்ளூர் மற்றும் வெளியூர் கமிஷன், கட்சி தேர்தல் பத்திர நிதி வேற எங்கேருந்து வருமாம்? தனியார், தனியார்ன்னு மோசடி கும்பல் குதிக்கிறது வேற எதுக்கு? மக்களுக்கு சேவை செய்யிறதுக்கா என்ன? இதை இன்சூரன்ஸ் கவர் பண்ணுமா? பண்ணாது. அரசாங்கம் கேக்குமா? கேக்காது.....
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூன்-202007:54:59 IST Report Abuse
தல புராணம்இப்படி தனியார் மருத்துவமனைகள் கொள்ளையில் ஈடுபட்டால் பொது மக்கள் என்னாவது? மோடி கிட்டே கேளுங்க. இதுக்குன்னே 20 லட்சம் கோடி ஒதுக்கியிருக்காரு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X