ஒரே நாளில், 8,392 பேருக்கு பாதிப்பு 7வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி : கடந்த, 24 மணி நேரத்தில், 'கொரோனா' வைரசால் புதிதாக, 8,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 230 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா, ஏழாவது இடத்திற்கு வந்துள்ளது.

சிகிச்சைநாட்டில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால் புதிதாக, 8,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, நாட்டில் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 90 ஆயிரத்து, 535 ஆக அதிகரித்துள்ளது. இதில், 93 ஆயிரத்து, 322 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 91 ஆயிரத்து, 818 பேர், சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் விகிதம், 48.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல், கடந்த, 24 மணி நேரத்தில், 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில், 89 பேர் பலியாகியுள்ளனர். பட்டியல் டில்லியில், 57; குஜராத்தில், 31; தமிழகத்தில், 13; உத்தர பிரதேசத்தில், 12; மேற்கு வங்கத்தில், எட்டு; மத்திய பிரதேசத்தில், ஏழு; தெலுங்கானாவில், ஐந்து; கர்நாடகாவில், மூன்று; ஆந்திர பிரதேசத்தில், இரண்டு; பீஹார், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் தலா, ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 5,394 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில், 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், வேறு சில நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஆவர்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.சர்வதேச அளவில், வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில், ஏழாவது இடத்திற்கு இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02-ஜூன்-202015:09:51 IST Report Abuse
skv srinivasankrishnaveni கொடுமையா இருக்கே பாபுலேஷன் அதிகம் என்பதால் இவ்ளோகொடூரமா ந தாக்குதலா ???மக்கள் ஒத்துழைக்காமல் கோரமாணவியாதிபரவி சாவுறதுக்கு என்னைய்யக்காரணம் மக்களின் அலட்சியமான குணம்தானா ????/எப்படியுமொருநாளுசிறுபோவும் இப்போதே போனால்போகட்டும் என்ற பொல்லாத்தனமா
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
02-ஜூன்-202010:26:22 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN மக்களுக்கு நோய் கொரோனா ... .நல்லாட்சியருக்கு @ மனிதாபமான இறையாண்மை மிக்க ஆட்சியருக்கு காங்கிரஸ் ஓர் கொரோனாவாக இருந்து செயல்படுவதால்... அதிகரிக்கவே செய்கிறது. எதிரிகள் ஏசல் தூற்றல் எதையும் காதில் வாங்காமல் தன் குறிக்கோளே தன் தலையாய கடமைக்கொண்டு செயல்படும் பிரதமர் ஓர் இமையம் போன்றவர் எனலாம். பல வெரியர்கள் .. அவர் காதில் வாங்குவதே இல்லை. கருமமே கண்ணாக உள்ளார்..நாட்டுநலன் கருதியே.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X