இந்தியாவை மிரட்டுகிறது சீனா: அமெரிக்கா திடீர் குற்றச்சாட்டு

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

வாஷிங்டன்; 'எல்லையில் நிலவும் பதற்றத்தை பயன்படுத்தி, இந்தியாவை, சீனா மிரட்டுகிறது,'' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ குற்றஞ்சாட்டியுள்ளார்.



latest tamil news



அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ கூறியதாவது:இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. ஆனால், இந்திய - சீன எல்லையில் தற்போது நிலவும் பதற்றமான சூழலை, தங்களுக்கு சாதகமாக, தந்திரமாக பயன்படுத்தி, இந்தியாவை, சீனா மிரட்டுகிறது.

ஒரு சில நடவடிக்கைகள் மூலம், சீன அதிபர் ஜின்பிங், தன் ராணுவத்தின் திறமையை காட்ட நினைக்கிறார். சீனாவின் அச்சுறுத்தல் குறித்து, நாங்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளோம்.அதிபர் டிரம்ப் மீதும், எங்கள் ராணுவத்தின் மீதும் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். அமெரிக்க மக்களின் நலனையும், நாட்டையும் பாதுகாக்க, அமெரிக்க ராணுவ வீரர்கள் தயாராக உள்ளனர். இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான், பிரேசில் போன்ற நாடுகளுடனான நட்பை, மேலும் பலப்படுத்தி உள்ளோம். சீனாவுக்கு எதிராக, அமெரிக்க பார்லிமென்டில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
அமெரிக்காவை நெருக்கடி நிலையில் தள்ளுவதற்கான முயற்சிகளில், சீனா இறங்கியுள்ளது. அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையை திருடுவது, அமெரிக்காவில் உள்ள வேலைவாய்ப்புகளை சீர்குலைப்பது, தென் சீன கடல் பகுதியில் அத்துமீறலில் ஈடுபடுவது என, சீனாவின் நடவடிக்கைகளுக்கு, பல உதாரணங்களை கூறலாம்.


latest tamil news



முதலில் கொரோனா வைரசை அமெரிக்காவுக்குள் புகுத்திய சீனா, இப்போது அரசியல் வைரசை புகுத்த முயற்சிக்கிறது. இந்த முயற்சிகளை, அமெரிக்க ராணுவம் முறியடிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார். கொரோனா வைரஸ் பரவல், ஹாங்காங்கில் சீனாவின் ஆதிக்கம், தென் சீன கடல் பகுதியில் அத்து மீறல் ஆகிய பிரச்னைகளில், சீனா - அமெரிக்கா இடையே, சமீப காலமாக மோதல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
02-ஜூன்-202015:27:13 IST Report Abuse
வெகுளி சீனா படிச்ச ஸ்கூல்ல பெரியண்ணன் ஹெட்மாஸ்டரடா.....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூன்-202014:14:44 IST Report Abuse
தல புராணம் சாமி குத்தம் ஆயிடிச்சி, கருப்பன் கோவமா இருக்கான். கிடா வெட்டி விருந்தும் சாராயமும் கேக்குதுன்னு பூசாரி வயிறு முட்ட குடிக்கிறா மாதிரி.. சீனா பூச்சாண்டியை காட்டி அமெரிக்க பூசாரி ஹெலிகாப்ட்ரை விக்க குட்டிக்கரணம் போடுறான்.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
02-ஜூன்-202012:11:37 IST Report Abuse
Krishna World & People, Must Unite For Actions Against Extreme Communism (now China), Extreme Islamists (almost all since they Never Respect-Use But Destroy Native language-culture-religion-People even in Arabia), White Supremacists (few-USA etc), Power Misusing Rulers & Officials (esp. Complainant Biased, Self-Interested, AntiPeople & AntiJustice Police & Judges Misusing Courts) Being Grave Destroyers of World & Humanity. Revoke Hongong's Handover to Communist China. Instead Handover it to Nationalist China-Taiwan. Simultaneously. Liberate Tibet & Xinkiang Swallowed by Communists (66% China Lost). Impose All Sanctions-Compensations on Communist China for Spreading Corona Pandemic & Deaths.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X