தீவு கிராமத்தில் தவித்த மாணவியை தேர்வுக்கு அழைத்து சென்ற படகு| Kerala govt deploys 70-seater boat to ferry lone schoolgirl for exams | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தீவு கிராமத்தில் தவித்த மாணவியை தேர்வுக்கு அழைத்து சென்ற படகு

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (1)
Share
ஆலப்புழா: கேரளாவில், தீவு கிராமத்தில் இருந்து, 11ம் வகுப்பு தேர்வெழுத செல்ல முடியாமல் தவித்த மாணவியை, அரசு படகில் அழைத்துச் சென்றவர்களுக்கு, பாராட்டு குவிகிறது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள, குட்டநாடு என அழைக்கப்படும் நன்னீர் தீவில் வசிப்பவர் சாண்ட்ரா பாபு, 17; இவரது

ஆலப்புழா: கேரளாவில், தீவு கிராமத்தில் இருந்து, 11ம் வகுப்பு தேர்வெழுத செல்ல முடியாமல் தவித்த மாணவியை, அரசு படகில் அழைத்துச் சென்றவர்களுக்கு, பாராட்டு குவிகிறது.latest tamil newsகேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள, குட்டநாடு என அழைக்கப்படும் நன்னீர் தீவில் வசிப்பவர் சாண்ட்ரா பாபு, 17; இவரது பெற்றோர், கூலி தொழிலாளர்கள்.சாண்ட்ரா பாபு, கோட்டயம் மாவட்டம் காஞ்சிராமில் உள்ள பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு, மே, 29, 30 தேதிகளில் தேர்வு அறிவிக்கப்பட்டது.ஆனால், அவர் வசிக்கும் பகுதியில் இருந்து, படகு மூலம் மட்டுமே வெளியே செல்ல முடியும்.

ஆனால், ஊரடங்கு காரணமாக, படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், சாண்ட்ரா தேர்வுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த, நீர் போக்குவரத்து துறை இயக்குனர், ஷாஜி வி.நாயர், மாணவிக்கு உதவ முடிவு செய்தார். இதையடுத்து, மாணவியை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல, ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.தேர்வு நாட்களில், மாணவி, ௫ கி.மீ., துாரத்தை நடந்தே கடந்து, படகு நிறுத்தப்பட்ட இடத்திற்கு வந்தார்.


latest tamil newsஅவரை மட்டும் தனி ஆளாக, 70 பேர் பயணிக்கும் படகில், தேர்வு நடைபெற்ற இடத்திற்கு அழைத்து சென்றனர். தேர்வு முடியும் வரை காத்திருந்து, மாணவியை மீண்டும், வீட்டிற்கு கொண்டு சேர்த்தனர். இதற்காக, மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணம் மட்டுமே, அவரிடம் இருந்து பெறப்பட்டது. இந்த தகவல் பரவிய நிலையில், கேரள நீர் போக்குவரத்து துறையினருக்கு, பாராட்டுகள் குவிகின்றன.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X