பிரதிஷ்டை தின பூஜை சபரிமலையில் நிறைவு| Sabarimala temple opens for ritual | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரதிஷ்டை தின பூஜை சபரிமலையில் நிறைவு

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020
Share

சபரிமலை : பிரதிஷ்டை தின பூஜைகள் முடிந்து சபரிமலை நடை நேற்று இரவு 7:30 மணிக்கு அடைக்கப்பட்டது.



latest tamil news



நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர்நம்பூதிரி நடை திறந்தார். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மூலவருக்கு அபிேஷகம் செய்தார். தொடர்ந்து கணபதிேஹாமத்துடன் பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து களப கலசத்தை மேல்சாந்தி எடுத்து கோயிலை வலம் வந்தார். களப அபிேஷகம் முடிந்து உச்சபூஜைக்குப்பின் நடை அடைக்கப்பட்டது.


latest tamil news



மாலை 5:00 மணிக்கு நடை திறந்து 6:30 மணிக்கு தீபாராதனையும், இரவு 7:00 மணிக்கு அத்தாழபூஜையும் நடைபெற்றன. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அடுத்து ஆனி மாத பூஜைகளுக்காக ஜூன் 14 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X