பொது செய்தி

தமிழ்நாடு

விமானங்கள் டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இருந்து, நேற்று(ஜூன் 1) பல்வேறு நகரங்களுக்கு, 24 விமானங்கள் இயக்கப்பட்டன. டிக்கெட் கட்டணம் அதிகரிப்பால், விமான பயணியர் செய்வது அறியாது, தவித்து வருகின்றனர்.சென்னையில் இருந்து, டில்லி, கோல்கட்டா, ஐதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், விஜயவாடா, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட, 24 நகரங்களுக்கு, நேற்று விமானங்கள் இயக்கப்பட்டன.அதேபோல, மற்ற நகரங்களில் இருந்து,
lockdown, coronavirus, Aeroplane, covid 19 lockdown, விமானங்கள், டிக்கெட், கட்டணம், அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இருந்து, நேற்று(ஜூன் 1) பல்வேறு நகரங்களுக்கு, 24 விமானங்கள் இயக்கப்பட்டன. டிக்கெட் கட்டணம் அதிகரிப்பால், விமான பயணியர் செய்வது அறியாது, தவித்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து, டில்லி, கோல்கட்டா, ஐதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், விஜயவாடா, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட, 24 நகரங்களுக்கு, நேற்று விமானங்கள் இயக்கப்பட்டன.அதேபோல, மற்ற நகரங்களில் இருந்து, சென்னைக்கு, 24 விமானங்கள் வந்தன. சென்னையில் இருந்து நேற்று, 3,100 பேர், பல்வேறு நகரங்களுக்கு பயணித்தனர். பல்வேறு நகரங்களில் இருந்து நேற்று, 1,100பேர் வரை, சென்னை வந்தனர்.


latest tamil news


தற்போது, உள்நாட்டு விமானங்களில், பல்வேறு நகரங்களுக்கு செல்ல, 2,358 ரூபாய் முதல், 29 ஆயிரத்து, 500 ரூபாய் வரை, டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விமான நிறுவன இணையதளத்தில், குறைந்த பட்ச விலையை தேர்ந்தெடுத்து, டிக்கெட் புக் செய்யும் போது, சாதாரண வகுப்பு டிக்கெட்கள் ஏற்கனவே, முன்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மீதமுள்ள அதிகபட்ச விலை டிக்கெட்டை, சம்பந்தப்பட்ட நபர் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார். சென்னையில் இருந்து, டில்லி, கோல்கட்டா, அந்தமான், மதுரை, கோவை, துாத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு வழக்கத்தை விட, அதிக விலைக்கு, விமான டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. இதனால், பயணியர் விமானப் பயணம் மேற்கொள்ள தயங்குவதோடு, செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shanan -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூன்-202016:37:36 IST Report Abuse
Shanan மற்ற அனைத்து மாநிலங்களிலும் பேருந்து கட்டணம் இரண்டு மடங்கு 3 மடங்கு அதிகரித்துவிட்டது நம் மாநிலத்தில் பழைய கட்டணம் தான் தனியார் பேருந்து செல்லாத போதே தெரியவில்லைய பலருக்கு கோரானா அண்டாதவாறு விமான சேவை வேண்டும் ஆனால் பழைய கட்டணத்தில் வேண்டுமென்றால் எப்படி...
Rate this:
Cancel
Shanan -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூன்-202016:37:33 IST Report Abuse
Shanan மற்ற அனைத்து மாநிலங்களிலும் பேருந்து கட்டணம் இரண்டு மடங்கு 3 மடங்கு அதிகரித்துவிட்டது நம் மாநிலத்தில் பழைய கட்டணம் தான் தனியார் பேருந்து செல்லாத போதே தெரியவில்லைய பலருக்கு கோரானா அண்டாதவாறு விமான சேவை வேண்டும் ஆனால் பழைய கட்டணத்தில் வேண்டுமென்றால் எப்படி...
Rate this:
Cancel
02-ஜூன்-202007:26:06 IST Report Abuse
தண்டாயுதபாணி விமான நிறுவனங்கள் இப்படி பன்னிகிட்டிருந்தா கடைசியில் kingfisher , jet airways நிலைமைதான் . தரமான சேவைகள் வழங்கி வந்த இந்த நிறுவனமே அகல பாதளத்துல விழுந்துந்துருச்சி.இப்ப இருக்குற indigo, air India, spice jet சேவை சொல்லும்படி ஒன்னுமில்லை
Rate this:
02-ஜூன்-202008:12:06 IST Report Abuse
TamilanIt is not possible for airlines to offer tickets at cheap price. Thats why Jet Airways collapsed. Lots of airlines have collapsed in the last three months without money and support from the governments across the world. Dont make nonsense comments without knowing the facts...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X