மீண்டும் மோடி பிரதமராக 70% இந்தியர்கள் விருப்பம்: எடியூரப்பா| 70% of people want Modi to be PM for another term, says Karnataka CM | Dinamalar

மீண்டும் மோடி பிரதமராக 70% இந்தியர்கள் விருப்பம்: எடியூரப்பா

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (25)
Share
PM modi, Narendra Modi, Iron Leader, BS Yediyurappa, எடியூரப்பா, பிரதமர், மோடி

பெங்களூரு: அடுத்த முறையும் நாட்டின் பிரதமராக, 'இரும்பு மனிதர்' மோடி தான் வரவேண்டும் என 70 சதவீத இந்தியர்கள் விரும்புவதாக, கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.


latest tamil news


இதுகுறித்து பெங்களூருவில் அவர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை அகற்றிய பிரதமர் மோடி, ஒரு இரும்பு மனிதர். அடுத்த தேர்தலிலும் வென்று, மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என 70 சதவீத இந்தியர்கள் விரும்புகின்றனர். அவர் மீண்டும் பிரதமரானால் நாட்டின் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைப்பார் என்பது இளைஞர்களின் நம்பிக்கை.

தொலைநோக்கு சிந்தனை கொண்ட மோடி, உலக அளவில் வலிமை மிக்க தலைவராக உருவெடுத்துள்ளார். அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார். முத்தலாக் ஒழிப்பு, வந்தே பாரத் மிஷன், புதிய மோட்டார் வாகன சட்டம், ராமர் கோவில் பிரச்னையை தீர்த்தது என பல முக்கிய நடவடிக்கைகள் அவரது ஆட்சியில் எடுக்கப்பட்டுள்ளது.


latest tamil newsகொரோனா பரவலை சிறப்பாக கையாண்டு வருகிறார் மோடி. 130 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், இந்த பிரச்னையை கையாளுவது எளிதான காரணம் அல்ல. ஊரடங்கு பாதிப்பிலிருந்து மீள, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்துகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X