சென்னையில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன?| Chennai's coronavirus tally grows by leaps and bounds | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன?

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (47)
Share
chennai, coronavirus, covid 19, chennai news, chennai coronavirus,
சென்னை, கொரோனா, அதிகரிப்பு

சென்னை: ஊரடங்கு தளர்வு, கடை, தொழில் நிறுவனங்கள் திறப்பு உள்ளிட்ட காரணங்களால், சென்னையில் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிற மாவட்டத்தை விட, சென்னையில், கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 15 ஆயிரத்தை கடந்து விட்டது.


சமூக பரவல்


வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் டில்லி மாநாடு சென்று வந்தவர்களுக்கு பாதித்த தொற்று, தீவிர நடவடிக்கையால் தடுக்கப்பட்டது. அப்போது, தினமும், 20க்கும் குறைவான பேர் பாதிக்கப்பட்டனர். கோயம்பேடு மார்க்கெட் பரவலுக்குபின், எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. வியாபாரிகள், அவர்கள் உறவுகள் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, பரிசோதனை செய்ததில், பலருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மருத்துவமனை, தனிமை முகாம் மற்றும் வீட்டு தனிமையுடன், தெருக்கள், 28 நாட்கள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்தல், பக்கத்தில் வசிப்போர் வெளியே செல்ல தடை போன்ற நடவடிக்கையால், சமூக பரவல் கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில், ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டது. இதையடுத்து, கடைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் சார்ந்த நிறுவனங்கள் திறக்கப்பட்டன.


latest tamil newsபரிசோதனை


சில தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதற்குமுன், பரிசோதனை செய்கிறது. இதில், பலருக்கு தொற்று இருப்பது தெரிந்தது.முக்கிய உடல் உறுப்புகள் பாதிப்பு, தள்ளி வைத்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ளுதல், மாதாந்திரம் மற்றும் திடீர் மருத்து பரிசோதனை போன்ற தேவைகளுக்கு, மருத்துவமனையை அணுகுவது அதிகரித்து வருகிறது.

கொரோனா பரிசோதனை செய்த பின் தான், மருத்துவர்கள், அவர்களுக்கு சிகிச்சை துவங்குகின்றனர். அதிலும், பலருக்கு தொற்று இருப்பது தெரியவருகிறது. கடந்த, 15 நாட்களாக, தொற்று பாதித்தவர்களின் தொடர்புகளுக்கு, அறிகுறி இருந்தால் மட்டும், பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது, அனைத்து தொடர்புகளுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.

முன்பு, மாநகராட்சி மையங்களில் தான், அதிகமான பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது, தனியார் மையங்களில் பரிசோதனை செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. மேலும், தடுப்பு நடவடிக்கையில் உள்ள மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் என, தொற்று பாதித்த அரசு ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.அதேபோல், வெளி மாவட்டம், மாநிலம், வெளிநாட்டில் இருந்து வருகிறவர்களில் சிலருக்கும், தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


பெரும் பீதி


இந்நிலையில், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கம், கடைகளில் அமர்ந்து உணவருந்துவது என, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இன்னும், படிப்படியாக தளர்வு அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினமும், 300, 500, 650 என, இருந்த தொற்று, 800க்கு மேல் பதிவாகிறது. 'இப்படியே சென்றால், இதற்கு என்று தான் விடிவு' என, பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஒரு பக்கம், பொருளாதாரத்தை மையப்படுத்தி, ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம், சென்னையில் தொற்று அதிகரிப்பது, பெரும் பீதியை கிளப்பி உள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X