பொது செய்தி

தமிழ்நாடு

செவ்வாய் கிழமைக்கு பருத்தி ஏலம் மாற்றம்

Added : ஜூன் 02, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வியாழக்கிழமை நடக்கும் பருத்தி ஏலம், இனி செவ்வாய் கிழமை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மேலாண் இயக்குனர் வாஞ்சிநாதன் கூறியதாவது: நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் புதன்கிழமை வாழைத்தார் ஏலமும், வியாழக்கிழமை பருத்தி ஏலமும் நடந்து வந்தது. இதில் பருத்தி ஏலமானது, இனி வாரத்தில் வியாழக்கிழமைக்கு மாற்றாக செவ்வாய்கிழமை நடைபெறும். வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவதால் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் சிரமம் உள்ளதாகவும், வியாபாரிகளும் பணத்தை செலுத்தி பருத்தியை கொண்டு செல்வதில் தாமதம் நிலவுவதாகவும் இரு தரப்பும் தெரிவித்ததன் அடிப்படையில் ஏலம் நடைபெறும் நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X