தமிழகம் வருவோருக்கு பிசிஆர் சோதனை கட்டாயம்: தமிழக அரசு| PCR test mandatory for Tamil Nadu: TN govt | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் வருவோருக்கு பிசிஆர் சோதனை கட்டாயம்: தமிழக அரசு

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (2)
Share
Tamil nadu, PCR Testing, tamil news, tn news, தமிழகம், பிசிஆர், பயணிகள், நெறிமுறைகள், சோதனை

சென்னை: தமிழக அரசு சார்பில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் வெளியிடபட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்படுகிறது. மேலும், அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். அதேபோல், மஹாராஷ்டிரா, டில்லி மற்றும் குஜராத்தில் இருந்து தமிழகம் வருவோருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயமாகும். வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்துக்குள் வெளிநாடு சென்று திரும்பியோர் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X