ஒரு ரூபாயில் ஒரு குடும்பத்தின் கண்ணீரை துடைக்கலாம்...

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 02, 2020
Share
Advertisement
latest tamil newsமக்களை சந்தோஷப்படுத்தி அவர்களை சிரிக்கவைப்பவர்களில் முதன்மையானவர்கள் புகைப்படக்கலைஞர்கள்.
வாழ்நாள் முழுவதும் நாம் பார்த்து பார்த்து மகிழக்கூடிய புகைப்பட பதிவுகளை கொடுத்தவர்களும் அவர்களே கொடுப்பவர்களும் அவர்களே.
ஆனால் இந்த கொரோனா காரணமாக தற்போது அவர்கள் வாழ்க்கையில் சிரிப்பும் இல்லை சந்தோஷமும் இல்லை.
சுபகாரியங்கள் எதுவும் நடைபெறாத சூழ்நிலையில் வருமானமின்றியும் நிவாரணமும் இன்றியும் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
தமிழகத்தில் இவர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் பேர் இருப்பார்கள் காலம் மாறும் நம் கவலைகள் தீரும் என்ற நம்பிக்கையுடன் காலம் தள்ளிவருகின்றனர்.
இதில் கவலைப்படக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் இந்த புகைப்படக்கலைஞர்களின் குடும்பத்தில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால் சில சமயம் அந்த குடும்பமே ரோட்டிற்கு வந்துவிடும் அவலம் நேர்ந்துவிடுகிறது.
புகைப்படக் கலைஞரும் மனிதநேயமிக்கவருமான பூமாலை ரவி ஒரு புகைப்படக்கலைஞரை பார்க்க போயிருந்தார்.


latest tamil news


அவர் இறந்து போயிருந்த நிலையில் அவரது மனைவியும் பிள்ளைகளும் சொல்லமுடியாத துயரத்தில் இருந்தனர்.
கவுரமாக சாப்பிடவும் பிள்ளைகள் படிக்கவும் முதலில் வழி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இறந்த புகைப்படக்காரரின் மனைவிக்கு ஒரு கறவை பசுவிற்கு ஏற்பாடு செய்துள்ளார் அதே போல பள்ளி திறந்ததும் பிள்ளைகளை படிப்பை தொடரவும் ஏற்பாடு செய்துள்ளார்.
இது என் ஒருவனது முயற்சி அல்ல புகைப்படக்கலைஞர்களான திருச்சி தீனதயாளு,காஞ்சிபுரம் அன்பு முனுசாமி,கிளியூர் ஐமேக் ரமேஷ் உள்ளீட்டோரின் கூட்டு முயற்சியே என்றவர் எங்கள் கண்ணில் படாமல் தமிழகத்தில் இப்படி புகைப்படக்கலைஞர்களை இழந்து நிர்கதியான குடும்பம் இருக்கிறதா என்பதை அறியவும் அவர்களுக்கு உதவவும் எண்ணி ஆரம்பிக்கப்பட்டதுதான்அட்சயபாத்திரம் திட்டம்.
மூன்று லட்சம் உறுப்பினர்கள் இந்த திட்டத்தின்கிழ் தங்களை உறுப்பினராக்கி கொள்ளலாம்.உறுப்பினராக இருப்பதற்கும் தொடர்வதற்கும் எந்த கட்டணமும் கிடையாது.
உறுப்பினர்களில் யாராவது இறந்தால் அப்போது மட்டும் மற்ற உறுப்பினர்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட உறுப்பினர் வங்கி கணக்கிற்கு ஓரு ரூபாய் அனுப்பினால் போதுமானது ஒரு ரூபாய்க்கு மேல் அனுப்பினாலும் சந்தோஷமே.
மூன்று லட்சம் உறுப்பினர்களில் ஒரு லட்சம் பேர் ஆளுக்கு ஒரு ரூபாய் அனுப்பினால் கூட ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் அதை வைத்து சம்பந்தப்பட்ட குடும்பம் ஒரளவு பிழைத்துக்கொள்ள முடியும்.
பணமும் பதவியும்தான் தப்புக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த திட்டத்திற்கு தலைவர் செயலாளர் எல்லாம் யாரும் கிடையாது எல்லோருக்கும் சமபங்கு உண்டு அதே போல பணத்தை இருப்பில் வைத்துக் கொள்ளும் வேலையே கிடையாது உறுப்பினர் இறந்தால் அப்போது மட்டும் நாங்கள் இருக்கிறோம் கவலைவேண்டாம் என்று சொல்லும் விதத்தில் ஒரு ரூபாய் அனுப்பினால் போதும் என்று திட்டத்தை பற்றி விளக்கினார் பூமாலை ரவி இது தொடர்பாக மேலும் விவரத்திற்கு பூமாலை ரவியை தொடர்பு கொள்ளவும் அவரது எண்:9994325075. கிழே உள்ள லிங்கை கிளிக் செய்தும் விவரம்
அறிந்து கொள்ளலாம்.
https://t.me/joinchat/NGfsk1PE2kZ181rCUBCuSg

-எல்.முருகராஜ்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X