பொது செய்தி

தமிழ்நாடு

4 மாவட்டங்களை தவிர்த்து கொரோனா கட்டுக்குள் உள்ளது: இபிஎஸ்

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
EPS, CoronaVirus in tn, Chennai, Coronavirus, Corona, Covid-19, இபிஎஸ், முதல்வர், தமிழகம், ஸ்டாலின், சென்னை, கொரோனா, கட்டுக்குள் உள்ளது

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் தவிர்த்து தமிழகம் முழுவதும் வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளதாக முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் இபிஎஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்தின் முடிவில் இபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் தவிர்த்து தமிழகம் முழுவதும் வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. சென்னையில் அரசு நிர்ணயித்த 15 மண்டலங்களில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ளதால் தொற்று அதிகமிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil news


பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்ட உடனே அவர்கள் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களும் சோதிக்கப்படுகின்றனர். பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 23,495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 13,170 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதேபோல், 184 பேர் உயிரிழந்துள்ளனர், 10,138 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் தற்போது குணமடைபவர்களின் விகிதம் சுமார் 56 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 0.80 சதவீதமாகவும் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.


latest tamil newsஸ்டாலினுக்கு பதில்


பொதுமக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள் தங்குத்தடையின்றி முழுமையாக கிடைக்கிறது. ஏப்., மே மாதங்களில் ரேஷன் பொருட்களை விலையில்லாமல் அரசு கொடுத்துள்ளது. இது ஜூன் மாதமும் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது வரை 2.71 லட்சம் பிசிஆர் கருவிகள் 43 சோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா விவகாரத்தில் என்னை நான் முன்னிலைப்படுத்தி விளம்பரம் தேடவில்லை. இதுவரை மொத்தம் 12,55,200 பிசிஆர் கிட்கள் பெறப்பட்டன. அதில் தற்போது 4,59,800 கிட்கள் இருப்பு உள்ளது.

மேலும், அரசிடம் 2,841 வென்டிலேட்டர்கள் உள்ளன, தனியாரிடம் 630ம், புதிதாக வாங்கப்பட்ட 620 வென்டிலேட்டர்களும் என மொத்தம் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன. தீவிர சிகிச்சையில் உள்ளவர்களுக்கு மட்டுமே வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களில் வெறும் 5 பேருக்கு மட்டுமே வென்டிலேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனால் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murphys Law -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூன்-202023:39:31 IST Report Abuse
Murphys Law According to the pattern, once in evey 6 to 10 days the count doubles. Therefore by end of june the count may hit 8 to 10 lakhs if severe test is not conducted. Hope we all quickly come out of this issue.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
02-ஜூன்-202021:40:03 IST Report Abuse
Krishna Cheap Politics, Bias & Corona Terrorism Against Cities Though Disease Spreads in All People - Concentrated Areas (all TOWNS, Taluks etc etc). IDIOTIC-FAT RULER & OFFICIALS Killing People in Concentration Camps (lncl. Mis-Managed Hospitals Etc Indian Leaders, PM-CM-Ministers-Sr Officials-IAS IPS, Public Health Officials-Testers etc etc Never Tests Even Positive BUT ScapeGoat-Terrorise People (Abroad- Even PMs & Bureaucrats Etc Affected). Punish All Anti-People Corona Terrorists (Giving False Positives More in Cities, MIG-HIG areas But Not in Slums etc etc). Disease-Already Under Control due to Lockdown-Hot Climate-Indian Immunity (Deaths are Far Less Compared to Normalcy Except Inflated Corona Deaths by Vested Health Terrorism 50% -Due to Fear, Negligent Medical Care & Hi-Patient Concentration) . Disease Came-In & RE-FLARING DUE To Foolish IMPORT OF EXPATRIATES & MIGRANTS (Quarantine In Distant ISLANDS–Andaman-Lakshadweep). Testing with Infected-abNormal Kits-High False Positives (Even in RT-PCRs). SPREADS Only In HI-GATHERINGS & AIR (All HotSpots-GreenOrangeRed Zones, Fencing Etc are Corona Terrorism). ONLY SIMULANEOUS ALL WORLD-STRICT LOCKDOWN with Social Distancing-Masks (for 15days With Most essentials Door delivered by Govt Staff followed by Localised Lockdown in all Hi-Concentration Areas for 15days-Extendable if Really required Testing Done only for Outgoers & Really Affected) HALTS DANGEROUS SPREAD (Otherwise Remains & Re-Flares Everywhere).
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
02-ஜூன்-202019:53:02 IST Report Abuse
Visu Iyer கொரோனா விவகாரத்தில் என்னை நான் முன்னிலைப்படுத்தி விளம்பரம் தேடவில்லை./// தேடினாலும் கிடைக்க வில்லை என்ற ஏக்கம் புரிகிறது.. பொறுமையாக இருங்கள்... தேர்தல் நாள் தொலைவில் இல்லை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X