டிரம்ப் பதிவை நீக்காத மார்க்; பேஸ்புக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
Trump, Facebook Employees, Zuckerberg,  Walkout, post, donald trump, டிரம்ப், பேஸ்புக், ஊழியர்கள், வேலைநிறுத்தம்

வாஷிங்டன்: கொரோனா தாக்கம் ஒருபுறம் உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்க, மறுபுறம் அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் ஜார்ஜ் ப்ளாயிட் படுகொலையை அடுத்து கருப்பின மக்கள் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இது உலக நாடுகளை அமெரிக்கா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னதாக தனது டுவிட்டர், இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் ஜார்ஜ் பிளாயிட் கொலை குறித்து சர்ச்சைப் பதிவிட்டது விவாதத்துக்குள்ளாகியது. போராட்டம் என்ற பெயரில் கருப்பின மக்கள் கடைகளை சூறையாடினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என அவர் பதிவிட்டு இருந்தார்.


latest tamil newsஇந்த பதிவை டுவிட்டர் தங்கள் தளத்தின் வரைமுறைக்கு எதிரானது எனக் கூறி நீக்கியது. ஆனால் பேஸ்புக் இதனை நீக்கவில்லை. இதனால் அதன் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து அவர் டிரம்ப் பதிவை பேஸ்புக் நீக்காததன் காரணம் குறித்து விளங்கினார். இந்த பதிவு அரசின் அறிவிப்பாகவே உள்ளதெனவும் அது பேஸ்புக் சட்டத்திட்டங்களுக்கு எதிரானதாகத் தான் கருதவில்லை எனவும் மார்க் முன்னதாகத் தெரிவித்து இருந்தார். தற்போது பேஸ்புக்கில் பணியாற்றும் டிரம்ப்பின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள் சிலர் மார்க்கின் இந்த முடிவை எதிர்த்துள்ளனர். இதனால் இவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news


டிரம்ப் இட்ட பதிவு நிறவெறியின் வெளிப்பாடு. இதனை பேஸ்புக் நீக்கி இருக்கவேண்டுமே அன்றி நியாயப்படுத்தக் கூடாது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் கருத்தை மதித்த பேஸ்புக் நிர்வாகம், அவர்களது வேலை நிறுத்தத்தை எதிர்க்கவோ சம்பளத்தை குறைக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மார்க் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
04-ஜூன்-202010:27:32 IST Report Abuse
NicoleThomson அங்கும் வந்தேறி மதத்தினர் அதிகமாயிட்டாங்க போல?
Rate this:
Cancel
sam - Bangalore,இந்தியா
02-ஜூன்-202016:25:12 IST Report Abuse
sam Most of the black people never work and they were mostly involved in Robbery/ Stealing shops etc, Finally and most important reason was White guys are jealous of them because white/Black Girls are attracted to Black guys. Hence most of the white guys living single.
Rate this:
Velinaattu Matharasi - Phoenix,யூ.எஸ்.ஏ
02-ஜூன்-202017:05:44 IST Report Abuse
Velinaattu MatharasiWhat an ignorant opinion...
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
02-ஜூன்-202018:42:20 IST Report Abuse
naadodi"Most of the black people never work and they were mostly involved in Robbery/ Stealing shops"...
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூன்-202022:44:46 IST Report Abuse
தல புராணம்தனக்கு அறிவில்லைன்னு தம்பட்டம் அடிச்சி சொல்லியிருக்கான் Sam....
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
02-ஜூன்-202016:17:04 IST Report Abuse
Srivilliputtur S Ramesh ஒரு ஆசிபாவுக்கு இந்தியா முழுவதும் கொந்தளித்த அரசியல்வாதிகள், செய்தி நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், இந்து சாமியார்கள் போலீசின் கண் முன்னமே அடித்து கொல்லப்பட்டதற்கு என்ன செய்தன ? செத்தவன் இந்து. கேட்க நாதியில்லை. அனைவரும் மவுனமாக உள்ளனர். இந்திய உள்துறை அமைச்சகம் கூட என்ன நடவடிக்கை எடுத்தது? எதுவும் எடுக்க வில்லை. அடுத்ததாக இன்னொரு சாமியாரை அடித்துக் கொன்றார்கள். நடந்து போகும் வழியில் லாரி இடித்து இறந்தவர்களின் இறப்புக்கு காரணம் மத்திய மோடி தான் என்று மீம்ஸ் போட தெரிந்தவர்களுக்கு, சாமியாரை அடித்து கொன்றது சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி அரசு என்று மீம்ஸ் போட தெரியவில்லை. காரணம் பணம். கத்துவதற்கு, மீம்ஸ் போடுவதற்கு என்று எல்லாவற்றுக்கும் பணம், பணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X