பொது செய்தி

தமிழ்நாடு

விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம்

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: வேளாண் விலை பொருட்களை விற்கும்போது, விற்பனை கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழநாடு வேளாண் விளைபொருட்கள் , விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987 ல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.இதன்படி ,வேளாண் பொருட்களை
வேளாண்பொருட்கள், தமிழகஅரசு, அவசர சட்டம், கவர்னர், முதல்வர், Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Tamil Nadu, ordinance, farmers, agriculture

சென்னை: வேளாண் விலை பொருட்களை விற்கும்போது, விற்பனை கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழநாடு வேளாண் விளைபொருட்கள் , விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987 ல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

இதன்படி ,
வேளாண் பொருட்களை விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, தமிழகத்தில் உள்ள எந்தவொரு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் சந்தைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட கிடங்குகள் மற்றும் குளிர்பதன மையங்களில் விற்பனை செய்வதற்கு வழிவகுக்கும். மேலும், விவசாயிகள் விளைபொருட்களை தங்கள் பண்ணையிலோ அல்லது உணவுப் பூங்கா வளாகங்களிலோ அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்கு வழிவகுக்கும். எந்தவொரு சூழ்நிலையிலும், விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யும்போது அவர்களிடம் விற்பனை கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்று அந்த அவசர சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


latest tamil news



முதல்வர் பரிந்துரை பேரில்,

1. தமிழக வேளாண்மை விளைபொருட்கள் விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1987 ல் சீர்திருத்தங்களை கொண்டு வருதல்; மற்றும்

2. விற்பனை குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தினை 29.05.2020க்கு பின்னர் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்தல். சீர்திருத்தங்களை உள்ளடக்கிய அவசர சட்டத்தினை கவர்னர் பிறப்பித்துள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN K - East Tambaram, Chennai,இந்தியா
02-ஜூன்-202021:18:43 IST Report Abuse
RAMAKRISHNAN K "எந்தவொரு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் " என்பது தவறு. எந்தவொரு விற்பனை கூடத்திலும் என்பதே சரியான தமிழ்.
Rate this:
Cancel
nizamudin - trichy,இந்தியா
02-ஜூன்-202018:58:31 IST Report Abuse
nizamudin சூப்பர் டூப்பர் m
Rate this:
Cancel
Sami Sam - chidambaram ,இந்தியா
02-ஜூன்-202018:42:23 IST Report Abuse
Sami Sam மார்க்கெட் கமிட்டி மாவட்டம் தோறும் இயங்கும்போது ஆரம்பத்தில் விற்பனையாளருக்கு வரி விதிக்கவில்லை வியாபார்களிடம் மட்டுமே பெற்றது. மீண்டும் அதே நிலை வருவது உற்பத்தியாளருக்கு நல்லதே ஆனால் வேறு மார்கத்தில் வசூல் செய்ய முனையக் கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X