பொது செய்தி

இந்தியா

இந்திய நடுத்தர தொழில்துறை மீட்பு; திணறும் மத்திய அரசு

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
MSME, Shutting Shop, Recovery, Covid-19, AIMO_Survey, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, இந்தியா, நடுத்தர தொழில்துறை, மத்திய அரசு

புதுடில்லி: கொரோனா ஊரடங்கு காரணமான நடுத்தர தொழில் துறைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் அரசின் நிதி உதவியால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை என தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 35 சதவீத சிறு, குறு, நடுத்தர தொழில்துறைகள் கொரோனாவால் மூடப்பட்டன. 37 சதவீத சுய தொழில்கள் சரிவடைந்துள்ளன என அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு கூறி உள்ளது.

கடந்த மார்ச் 25ம் தேதி முதல் சிறு, குறு தொழில்கள் முடக்கப்பட்டன. ஏப்., 21ம் தேதி இவற்றில் சிலவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த சனியன்று சரிந்த இந்திய பொருளாதாரத்தை மீட்க வரைமுறைகளை அளித்தது மத்திய அரசு. இதனை ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்த உத்தரவிட்டது. இதுகுறித்து 46 ஆயிரம் தொழில் துறையினரிடம் முன்னதாக அரசு கருத்து கேட்டது. இவர்களில் 32 சதவீதத்தினர் ஊரடங்கால் அடைந்த நஷ்டத்தை ஈடுகட்ட இன்னும் ஆறு மாத காலங்கள் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ள நிலையில் 12 சதவீதம்பேர் இன்னும் 3 மாதகாலம் ஆகும் எனத் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


இந்தியாவின் ஆறரை கோடி நடுத்தரத் தொழில்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்றரை கோடி பேர் வேலையில் உள்ளனர். இவர்களில் 1.3 கோடி பேர் சுயதொழில் செய்பவர்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இதுபோன்ற பெரும் தொழில் சரிவை நடுத்தர தொழில்துறை கண்டதில்லை என தொழிலாளர் அமைப்புத் தலைவர் கே.இ.ரகுநாதன் தெரிவித்துள்ளார்.


latest tamil news


கார்பரேட் தொழில் நிறுவனங்களில் 46 சதவீதம் பேர் தொழில்துறை மீண்டு வர 3 மாதங்கள் ஆகும் எனவும் 26 சதவீதம்பேர் இந்த ஆண்டு இறுதியிலேயே தொழில்துறை மீளும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் தொழில்கள் மூடப்பட வாய்ப்பில்லை என்றாலும்கூட பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இவர்களில் 6 சதவீத தினசரி பயன்பாட்டு அத்யாவசிய நடுத்தர தொழிகள் பாதிப்படையவில்லை. கடந்த மாதம் மத்திய அரசு நடுத்தர தொழில்துறை மீட்புக்கு பல சலுகைகளை அறித்தது. 3 லட்ச ரூபாய் வரை வட்டியில்லாக் கடன், 50 ஆயிரம் கோடி ஈக்விட்டி உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் நஷ்டத்தை ஈடு செய்யமுடியவில்லை என தொழில் நடத்துபவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
02-ஜூன்-202022:03:55 IST Report Abuse
m.viswanathan இன்னொரு முறை பணமதிப்பிழப்பு செய்தால் பொருளாதாரம் மேம்படும்
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
02-ஜூன்-202021:27:34 IST Report Abuse
Rajas வெற்றி கொடி கட்டு : இவர்கள் பொருளாதர அறிவு வேறு. சாதாரண விற்பனையை விட டிஸ்கவுண்ட் விற்பனையில் அதிக மக்கள் வாங்குவதை பார்த்திருக்கிறார்கள். உடனே அங்கேயே ஒரு ஐடியா வந்து விட்டது. தொழிற்சாலைகளுக்கு கடன் கொடுத்தால் அவர்கள் பொருளை தயாரிப்பார்கள். அப்போது விலை அதிகம் இருப்பதால் மக்கள் வாங்க மாட்டார்கள். கொஞ்ச நாட்கள் கழித்து வருட முடிவில் வேறு வழியில்லாமல் 50 % தள்ளுபடியில் விற்கும் போது மக்கள் வாங்குவார்கள். அப்போது மக்கள் கையில் பணம் இருக்கிறது என்று சொல்லி கொள்ளலாம். இதை வைத்து பொருளாதாரம் உயர்ந்து விட்டது என்று தங்களுக்கு வேண்டப்பட்ட சிலரை வைத்து சொல்ல வைத்து விடலாம். எப்படி ஐடியா.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
02-ஜூன்-202021:20:17 IST Report Abuse
sankaseshan The problem is worldwide . It cannot be back to normal in no time . But the country will tide over the crises definitely .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X