அசாமில் நிலச்சரிவு: 20 பேர் பலி

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020
Share
Advertisement
அசாம், நிலச்சரிவு, உயிரிழப்பு, பலி, காயம், மழை, killed, landslides, Assam, Barak Valley, Guwahati

கவுகாத்தி: அசாமில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் . பலர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் அசாமின் தெற்கு பகுதியில் உள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள மூன்று மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, கச்சார் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும், ஹைலகண்டி மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும், கரிம்கஞ்ச் மாவட்டத்தை 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

நிலச்சரிவை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள முதல்வர் சர்பானந்தா சோனவால், உறவினர்களை, இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.


latest tamil news


அசாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கோல்பரா மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாகான் மற்றும் ஹோஜாய் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 348 கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 27 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X