பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 24 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; இதுவரை 197 பேர் பலி

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Tamilnadu, CoronaCases, DeathToll, Discharge, CoronaVirus, தமிழகம், கொரோனா, வைரஸ், உயிரிழப்பு, பலி, டிஸ்சார்ஜ், பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 2) ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆகவும், பலி எண்ணிக்கை 197 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 55 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 24,586 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 73 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 11,094 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 12 பேரும், செங்கல்பட்டில் ஒருவரும் என மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news


இன்று ஒரே நாளில் 536 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 13,706 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 10,680 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,378 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 20,857 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 2,351 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.P.Pillai - CHENNAI,இந்தியா
03-ஜூன்-202009:21:56 IST Report Abuse
M.P.Pillai கொரானாவை விரட்ட தமிழக அரசு விழித்திரு விலகியிரு என்று கூறுகிறார்கள். ஆனால் எதிர் கட்சி அவர்கள் ஒன்றிணைவோம் என்று கூறுகிறார்கள். இதனால்தான் கொராணா பரவல் கூடுதோ .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X