பொது செய்தி

தமிழ்நாடு

மும்பை நோயாளிகள் வருகை அதிகரிப்பு: தென்மாவட்டங்களில் கிடுகிடு உயர்வு

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

திருநெல்வேலி:தென்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பில் உள்ளூர் மக்களை விட மும்பையில் இருந்துவந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.



latest tamil news




இட்லி வியாபாரம் உள்ளிட்ட வணிகங்களை மேற்கொள்கின்றனர். அங்கு கொரோனா பாதிப்பின் தீவிரம் காரணமாக மும்பையில் இருந்து தினமும் வாகனங்களில் தமிழகம் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மும்பையில் இருந்து தமிழகம் வரும் சிறப்பு ரயில்களிலும் வந்தவண்ணம் உள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதித்த உள்ளூர் நபர்கள் 107 பேர். ஆனால் மும்பையில் இருந்து வந்தவர்களின் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 259 ஆக உள்ளது. இவர்களில் இன்று வந்தவர்கள் 11 பேர். குணமாகி சென்றவர்கள் தவிர தற்போது 89 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


latest tamil news


துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களில் நோய் பாதித்தவர்கள் 109 பேர். மும்பையில் இருந்து துாத்துக்குடிக்கு வந்தவர்களில் நோய் பாதித்தவர்கள் 168 பேர். துாத்துக்குடிக்கு இன்று மட்டும் 20 பேர் மும்பையில் இருந்து வந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 126 பேர். தென்காசி மாவட்டத்தில் நோய் பாதித்தவர்கள் 68 பேர். மும்பையில் இருந்து வந்தவர்களின் நோய் பாதித்தவர்கள் 22 பேர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 22 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
02-ஜூன்-202020:08:00 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு என்னத சொல்ல முதன் முதலில் இந்தியாவுக்கு கொரானாவை அறிமுகப்படுத்தியது ...
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
02-ஜூன்-202019:21:37 IST Report Abuse
s vinayak ஒன்றிணைவோம் வா தமிழா
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
02-ஜூன்-202019:16:49 IST Report Abuse
Visu Iyer ஆக... கொரநா என்பது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X