பொது செய்தி

இந்தியா

பொருளாதாரத்தை மீட்பதில் முன்னிலை வகிக்க போகும் மாநிலங்கள்

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
பொருளாதாரம், மாநிலங்கள், ஊரடங்கு, தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப், corona, coronavirus, covid-19, corona lockdown, corona update, coronavirus update, curfew

புதுடில்லி : ஊரடங்கில் இருந்து இந்தியா மீண்டு வர, பொருளாதாரத்தை மீட்பதில், தமிழகம், பஞ்சாப், கேரளா, ஹரியானா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் முன்னிலையில் வகிக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஆய்வு நடத்திய எலாரா செக்யூரிட்டீஸ் தொழில் அமைப்பின் கரீமா கபூர் கூறுகையில், கேரளா, பஞ்சாப், தமிழகம், ஹரியானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பொருளாதார நடவடிக்கைகள் துவங்கிவிட்டன. அங்கு, மின்சாரம் நுகர்வு, போக்குவரத்து நெரிசல், மொத்தவிற்பனை மார்க்கெட்களுக்கு விவசாய பொருட்கள் வருகை ஆகியவை துவங்கியுள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள் மிகுந்த மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் பின்தங்கியுள்ளன.

சாதாரண பொருளாதார நடவடிக்கைகளை துவக்குவதே, இந்தியாவின் பொருளாதாரத்திற்கு தூண்டுதலாக இருக்கும். நாட்டின் செயல்பாடுகளில் முன்னேற்றம் கண்ட போதும், அவ்வப்போது ஒரு சில இடங்களில் அப்படியே உள்ளது. இந்த ஆய்வில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், மின்சார தேவை அதிகரித்துள்ளது, விவசாய தேவை, அதிகரிப்பை பிரதிபலிக்கிறது. டில்லியிலும் மின்சார தேவை அதிகரித்துள்ளது. புதிய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு, நுகர்வோர்கள் தங்களது நுகர்வு மறையை மாற்றி கொண்டது கூகுள் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.


latest tamil newsசலூன் சேவைகள், ஏசி, விமான பயணம், பைக்குகள், வாஷிங் மெஷின்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது. ஊரடங்கு அதிகரித்த உடன், மருந்து, பலசரக்கு பொருட்கள், சோப்புகள் ஆகியவை குறித்து இணையத்தில், அதிகளவில் தேடப்பட்டுள்ளன. அதேநேரத்தில் , ஹெட்போன், ஹேர் ஆயில், லேப்டாப், மொபைல் போன்கள் நகை, தரை துடைப்பான்கள் மற்றும் மைக்ரோ ஓவன்களை தேடுவதையும் மக்கள் மறக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
03-ஜூன்-202009:43:47 IST Report Abuse
Sampath Kumar இதில் ஒரு வட மாநிலம் கூடு இல்லை பின்ன எதுக்கு நிதி மட்டும் அள்ளி கொடுக்கீறீங்க?? கேக்கும் தென் manilathuku அதுவும் தமிழ் நாட்டுக்கு கொடுக்க மாட்டேங்கிறீர்க வட மாநிலத்தின் வோட் வேண்டும் போல விளங்கிடும்
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
03-ஜூன்-202003:03:01 IST Report Abuse
Mirthika Sathiamoorthi என்னது தமிழ்நாடா? திருட்டு திராவிட கும்பல் பண்ணுன ஊழல் தான் இதுக்கு காரணம். கேக்கவே அசிங்கமா இருக்கு. சுடலை கும்பல் அட்டூழியம் போதாதா? தமிழ்நாடு கேட்டு குட்டி சுவரியிட்டு போயிட்டிருக்கு. இதை தட்டிக்கேட்க யாரும் இல்லையா? திருட்டு திமுகவை ஊரைவிட்டு தொரத்துனாதான் நம்ம தமிழ்நாட்டை காப்பாத்தி மேற்சொன்ன லிஸ்டில் இருந்து தூக்க முடியும். நல்ல வேலை எல்ல வெளிமாநில தொழிலாளரையும் தமிழ்நாட்டிலே இருந்து எப்படியோ தொறத்தியாச்சு. அவனுக இல்லாம இவனுக எப்புடி பொருளாதாரத்தை உயர்த்துவானுக்கா?
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
02-ஜூன்-202022:11:34 IST Report Abuse
பாமரன் அய்யய்யோ... லிஸ்டில் புண்ணிய பூமி குஜராத் இல்லாதது கூட பரவாயில்லை... தமிழ் நாடு இருப்பதை இந்த பகோடாஸால ஜீரணிக்க முடியாதே....??? என்னன்ன சொல்லி சாபம் விட போறாய்ஙகளோ...???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X