பொது செய்தி

இந்தியா

விவகாரத்து மூலம் ரூ.24 ஆயிரம் கோடி பெற்று உலக பணக்காரரான பெண்!

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
divorce, World's latest billionaire, costly divorce, Asia, விவாகரத்து, பணக்காரர், சீனா, பெண்,

பெய்ஜிங்: ஷென்சென் காங்தாய் என்ற சீன மருந்து நிறுவன தலைவர் டு வெய்மென், தனது மனைவியை விவாகரத்து செய்ததால், ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை அவர் பெயருக்கு மாற்றியுள்ளார்.

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் டு வெய்மென்(56). கல்லூரியில் வேதியியல் படித்த இவர், 1987-ல் ஒரு கிளினிக்கில் வேலைக்கு சேர்ந்தார். 95-ல் ஒரு பயோடெக் நிறுவனத்தில் விற்பனை மேலாளரானவர், 2004-ல் காங்தாய் பையாலஜிகல் புராடக்ட்ஸ் என்ற மருந்து நிறுவனத்தை தொடங்கினார். 2009-ல் மின்ஹாய் என்ற நிறுவனத்தை வாங்கும் அளவிற்கு வளர்ந்தார். 2017-ல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கும் மேல் ஆகும்.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் திட்டத்தை இந்நிறுவனம் அறிவித்தபோது, காங்டாய் பங்குகள் கடந்த ஆண்டில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது. பிப்ரவரியிலிருந்து நிறுவனத்தின் வளர்ச்சி ஏற்றத்திலேயே காணப்படுகிறது.

இந்நிறுவனத்தில் மே 2011 முதல் 2018 வரை அவரது மனைவி யுவான் லிபிங்(49) இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது அவர் துணை நிறுவனமான பெய்ஜிங் மின்ஹாய் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் துணை பொது மேலாளராக உள்ளார்.


latest tamil newsகருத்து வேறுபாடு காரணமாக லிபிங்கை, டு வெய்மென் கடந்த மாதம் விவாகரத்து செய்தார். அதன் காரணமாக தனக்கு சொந்தமான பங்குகளிலிருந்து 161.3 மில்லியன் பங்குகளை தனது முன்னாள் மனைவி யுவான் லிப்பிங்கிற்கு மாற்றினார். அப்பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் ரூ.24 ஆயிரம் கோடி ஆகும். இதன் மூலம் உலக பணக்காரர்கள் வரிசையில் யுவான் லிப்பிங் இடம்பிடித்துள்ளார்.

விவாகரத்தினால் டு வெய்மென்னின் நிகர சொத்து மதிப்பு ரூ.49 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.23 ஆயிரத்து 300 கோடியாக குறைந்துள்ளது. விவாகரத்து செய்தியால் நிறுவனத்தின் பங்குகளும் இன்று (ஜூன் 2) 3.1% வீழ்ச்சியடைந்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesan Mani - chennai,இந்தியா
04-ஜூன்-202004:03:42 IST Report Abuse
Ganesan Mani I know because of me DMK died if real fight AIADMK will also die in tamilnadu if people's got benefitted by this parties only they will vote suya adayam
Rate this:
Cancel
Ganesan Mani - chennai,இந்தியா
04-ஜூன்-202004:01:31 IST Report Abuse
Ganesan Mani Alwarpet benefit fund in tamilnadu chennai has assets and everything retired judge govt us in distributing place but they are not giving even principal returning what they are going to do
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூன்-202023:49:45 IST Report Abuse
தல புராணம் ஆமெசான் நிறுவன அதிபர் ஜெஃப் பேஜோஸ் தனது விவாகரத்தான மனைவி மெக்கென்ஸி க்கு தந்த பங்கு 3.5 billion US டாலர். அன்றைய பங்கு சந்தையில் 2.8 லட்சம் கோடி ரூபாய். அதற்கு பிறகு ஆமெசான் பங்கு விலை 10% ஆவது ஏறியுள்ளது. ஹிந்துஸ்தானில் மனைவியை விட்டு ஒட்டிவிட்டு கல்யாணமே ஆகல்லைன்னுபொய் சொல்லி விவேகானந்தர் வேஷம் கூட போடலாம்.
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
03-ஜூன்-202002:46:07 IST Report Abuse
NicoleThomsonkatchi kooda nadathalam...
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
03-ஜூன்-202014:03:13 IST Report Abuse
Dr. Suriyaathu mattuma thanakku pirantha kulanthaiyai kuda illainnu sollalaam....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X