பொது செய்தி

இந்தியா

இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தைக்கு உதவினார் ஷாரூக்கான்

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

பாட்னா: ரயில் நிலைய நடைபாதையில் இறந்த தாயை எழுப்ப முயன்ற ஒரு வயது குழந்தைக்கு உதவ முன் வந்துள்ளார் நடிகர் ஷாரூக்கான்.



latest tamil news



பீகார் மாநிலம் முசார்பூர் ரயில் நிலையத்தில் கடந்தசில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவர் உடல் நல குறைவால் மரணம் அடைந்தார். அவரது ஒரு வயது குழந்தை ஒன்று தாய் இறந்தது கிடப்பதை அறியாமல் அவரை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டது. இது குறித்த வீடியோ அனைவரையும் கண்கலங்க வைத்தது. தாயின் மரணத்தை கூட அறிய முடியாத குழந்தையின் நிலையை நினைத்து மக்கள் வருத்தம் அடைந்தனர்.

இதனை கண்ட நடிகர் ஷாரூக்கான் அந்த குழந்தைக்கு உதவ முன்வந்துள்ளார். அவர் நடத்தி வரும் மீர் அறக்கட்டளை மூலம் உதவிகள் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட டுவிட்டரில் குழந்தை எங்கள் அறக்கட்டளையை வந்து சேர உதவிய அனைவருக்கும் நன்றி .தனது தாத்தாவின் பராமரிப்பில் உள்ள குழந்தைக்கு உதவ நாங்கள் முன் வந்துள்ளோம். என பதிவிடப்பட்டு உள்ளது.


latest tamil news



நடிகர் ஷாரூக்கான் பதிவிட்டு உள்ள டுவிட்டரில் தாயை இழந்த இந்த இக்கட்டான சூழலில், குழந்தைக்கு மன வலிமை கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம் எனவும் அவர் கூறியுள்ளார். நமது அன்பைபும், ஆதரவையும் அந்தக் குழந்தைக்கு வழங்குவோம் என பதிவிட்டு உள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
07-ஜூன்-202017:50:53 IST Report Abuse
S. Narayanan இரக்கமுள்ள மனித தன்மை கொண்ட உண்மை மா மனிதர்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
03-ஜூன்-202017:38:24 IST Report Abuse
Endrum Indian இது தான் வீடியோவின் வலிமையா??
Rate this:
Cancel
Sankaran - chennai,இந்தியா
03-ஜூன்-202016:52:54 IST Report Abuse
Sankaran குழந்தையின் பெயர் என்ன?
Rate this:
R.M.Muthu - Guangzhou,சீனா
04-ஜூன்-202015:09:43 IST Report Abuse
R.M.MuthuAny name ....Need heart...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X