பொது செய்தி

இந்தியா

'உலக நாடுகளில் இந்தியாவில் தான் குறைவான இறப்பு விகிதம்'

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Lav Agarwal, covid 19, coronavirus, Indian bureaucrat, India, Covid-19 fatality rate, Health Ministry, corona in India, இந்தியா

புதுடில்லி: உலக நாடுகளில் இந்தியாவில் தான் கொரோனா இறப்பு விகிதம் 2.82 சதவீதம் என குறைந்த அளவில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்ததாவது: இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.82 சதவீதமாக உள்ளது. உலக நாடுகளின் இறப்பு சதவீதம் 6.13 ஆக உள்துடன் ஒப்பிடும் போது, இது உலகிலேயே மிகக்குறைந்த இறப்பு சதவீதம். இந்தியாவில் கொரோனா பாதிப்பை மட்டும் கருத்தில் கொள்ளாமல், இந்தியாவின் மக்கள் தொகையையும் பார்க்க வேண்டும். இந்தியாவை போல அதிக மக்கள் தொகை கொண்ட 14 நாடுகளில், நம்மை விட 22.5 மடங்கு வைரஸ் பாதிப்புகளையும், 55.2 மடங்கு இறப்புகளையும் கொண்டுள்ளன.


latest tamil newsநம் நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும், வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்பவர்களின் விகிதமும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புள்ளவர்களை அடையாளம் கண்டு சிகிச்சை அளிப்பதனால் இது சாத்தியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JG Muthuraj - bangalore,இந்தியா
03-ஜூன்-202000:43:38 IST Report Abuse
JG Muthuraj இறப்பு புள்ளிவிவரத்தை சுட்டிக்காட்டி கொண்டே நம்மை ஆறுதல் படுத்தக்கூடாது. இதை இந்தியாவின் வெற்றி என நினைப்பதும் சரியல்ல. கோரோனோவின் பாதிப்பு சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளை அதிகம் பாதித்துள்ளது இன்னும் பாதிக்கும். மனுக்குலத்தை புரட்டிப்போட்டுட்டுவிட்டது. தூர, அண்டைநாடுகளில் ஏற்படும் விளைவுகளும் நம்மை எல்லா துறைகளிலும் பாதிக்கும். லாக் டௌனிலிருந்து வெளியேறுகிறோம் என்பதெல்லாம் சற்று ஆறுதலுக்காகவே. இன்னும் அதிக வேலைக்கும் பொறுப்புகளுக்கும் நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். குணமளிக்கும் மருந்து அவசியம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இது இந்தியர்களால் முடியும். அதற்க்கு நம்மை இன்னும் சீர்படுத்த வேண்டும். பிரிவு மனப்பான்மை ஒளிந்து ஒற்றுமை ஓங்கவேண்டும்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூன்-202022:34:52 IST Report Abuse
தல புராணம் தினசரி பிறப்பு இறப்பையே கூட சரியாக பதிவிடாத நாடுகளில் முதலிடம் வகிப்பதும் நமது இந்திய நாடு. இறப்பின் காரணத்தை சரியாக வெறும் 0.3% மட்டுமே பதிவிடும் நாடு நமது இந்தியா (ஆதாரம்- இந்திய புள்ளிவிவர துறை)..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூன்-202022:32:20 IST Report Abuse
தல புராணம் இதை இப்போது சொல்ல வேண்டாம். ஒரு வருடம் கழித்து, தினசரி இறப்பு எண்ணிக்கையை முந்தின வருடங்களில் ஒப்பிட்டு பார்த்து விட்டு பிறகு சொல்லுங்கள் இதை. பிறப்பு இறப்பையே சரியாக பதிவிடாத நாடுகளில் முதலிடம் வகிப்பதும் நமது நாடு. இறப்பின் காரணத்தை சரியாக வேறு 0.3% மட்டுமே பதிவிடும் நாடு நமது இந்தியா (ஆதாரம்- இந்திய புள்ளிவிவர துறை). ஒரு நாளில் இறக்கும் மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 27,000 அதில் ஆயிரம் புதிய சாவுகளை பொய்க்காரணம் சொல்லி மறைப்பது இத்தாலி, பிரான்ஸ் போன்ற சிறு நாடுகளில் முடியாது, ஆனால் லஞ்ச ஊழலில் முதலிடம் வகிக்கும், ஜனத்தொகையில் முதலிடம் வகிக்கும், மக்கள் நலனை விட தற்பெருமை முக்கியம் என்று பொய்யையே போஜனமாக உண்ணும் தலைவர்களால் ஆளப்படும் இந்தியாவில், இது சின்ன மேட்டர். We have to wait and see to know the true numbers. நான் திரும்ப திரும்ப செய்வது இதை தான். பொய் கொஞ்ச நாளைக்கு ஓடும், உண்மை ஓடிக்கொண்டே இருக்கும். இந்த உண்மை வெளி வரும்.
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
03-ஜூன்-202003:46:00 IST Report Abuse
NicoleThomsonI Know Everything=IKE , this disease doesnt have any medicine...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X