ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா ; உலக சுகாதார அமைப்பு

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020
Share
Advertisement

மாஸ்கோ : ரஷ்யாவில் கொரோனா தாக்கம் காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்புகளில் அதிக எண்ணிக்கையுடன் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. அதை தொடர்ந்து, பிரேசில் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் உள்ளன. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நோயின் தாக்கம் தற்போது (முன்பை விட) குறைந்து வருகிறது. ஆனால் கிழக்கு ஐரோப்பாவில், ரஷ்யாவில் மட்டும் கொரோனாவின் தாக்கம் குறையாமல் தாண்டவம் ஆடி வருகிறது.


latest tamil news



இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்க்கெரட் ஹாரிஸ் கூறுகையில், நோய் பாதிப்புகளை பொறுத்தவரை, மேற்கு ஐரோப்பாவில் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் கிழக்கு பகுதியில் குறிப்பாக ரஷ்யாவில் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளில் மார்ச்.,மாதத்தில் நோய் பாதிப்பு தீவிரமாக இருந்தது. தற்போது மே மாதத்தில் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது 4.2 லட்சம் கொரோனா பாதிப்புகளுடன் ரஷ்யா 3 வது இடத்தில் உள்ளது. இருப்பினும் பலி எண்ணிக்கை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 50,376 பேர் பலியாகினர்.


latest tamil news



ரஷ்யாவில் கொரோனா தொற்று அதிகரித்து மேலும் 8,863 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது. இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 423,741 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 182 பேர் பலியாகினர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,037 ஆக உயர்ந்தது. புதிதாக 11,108 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தனர். இதனை தொடர்ந்து, நாட்டில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 186,985 ஆக அதிகரித்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X